சச்சினை பேசவைத்த சமி; இந்திய அணி பாஸ்ட் பவுலிங் யூனிட் பற்றி சச்சின் பரபரப்பு பேச்சு!

0
882
Sachin

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா வெளியேறிய பொழுது, இந்திய அணி ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய முன்னாள் வீரர்களும் பெரிய அளவில் நம்பிக்கை இழந்து காணப்பட்டார்கள்!

காரணம், ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்கின்ற அளவில் மட்டுமே கிடையாது. இந்திய அணியின் பாஸ்ட் பௌலிங் துறை டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம்.

- Advertisement -

இறுதி கட்ட ஓவர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகப்படியான ரன்களை கசியவிட்டு, பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் அடித்தாலும் அது வெற்றி பெற உதவாமல் செய்தார்கள். சமீபத்தில் மட்டும் ஆறு முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவும் இல்லாமல் போனது மட்டுமில்லாமல், அவருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட முகமது சமியும் கோவிட் தோற்றால் பாதிக்கப்பட, இன்னொரு புறத்தில் ஹர்சல் படேல் காயத்திலிருந்து மீண்டு வந்து ஆனால் அதிகப்படியான ரன்களை தர, உலகக்கோப்பை விளையாட ஆஸ்திரேலியா கிளம்பிய இந்திய அணி குழப்பத்தோடுதான் விமானம் ஏறியது.

ஆனால் இன்று முகமது சமி ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் கடைசி ஓவருக்கு வந்து பதினோரு ரன்களுக்கு பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே தந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி, இந்திய பந்துவீச்சு துறையின் மீது இருந்த அவநம்பிக்கையை சுத்தமாக துடைத்து எறிந்து விட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

தற்போது இதுகுறித்து உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறும்பொழுது ” பும்ரா இல்லாதது ஒரு மிகப் பெரிய இழப்பு. இந்த நேரத்தில் அவருக்குப் பதிலாக நமக்கு ஒரு முழுமையான ஸ்டிரைக் பாஸ்ட் பவுலர் தேவை. அப்போதுதான் பேட்ஸ்மேன்களை அதிரடியாக தாக்கி விக்கெட்டை கைப்பற்ற முடியும். என்று தனது பந்துவீச்சின் மூலம் முகமது சமி அதை நிரூபித்து இருக்கிறார். பும்ராவுக்கு மிகச் சரியான மாற்று இவர்தான் என்று காட்டிவிட்டார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பற்றிப் பேசிய சச்சின் ” அவர் நமக்கு மிக நம்பிக்கை அளித்துள்ள ஒரு பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் ஒரு சமநிலையான பையனாகத் தெரிகிறார். ஏனென்றால் நீங்கள் ஒரு வீரரை பார்க்கும் பொழுது அவரது மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று, அதை வைத்து அவர் எப்படியான வீரர் என்று புரிந்து கொள்ளலாம் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து இதை விளக்கமாகப் பேசிய சச்சின் “அர்ஸ்தீப்பிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவரிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டத்தில் அவர் மிக உறுதியாக செயல்படுகிறார். இந்த வடிவ கிரிக்கெட்டில் இப்படி ஒரு திட்டத்தோடு மிக உறுதியாக செயல்படுவது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் மிக தைரியமாக புதுமையான ஷாட்களைஇந்த வடிவ கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். எனவே நம்மிடம் ஒரு திட்டமும் அதில் உறுதியும் கட்டாயம் தேவை ” என்று பேசியிருக்கிறார்!