720 ரன்ஸ்.. இந்தியா படைத்த மெகா சாதனை.. சிக்கிய நியூசிலாந்து.. வெல்ல முடியுமா முதல் டெஸ்ட் போட்டியை? – முழு தகவல்கள்

0
7

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 720 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 368 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்ய ஆரம்பித்த இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 85, படிக்கல் 80, கேஎல் ராகுல் 136, கில் 98 ரன்கள் எடுத்திருந்தார்கள். இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அன்சூல் காம்போஜ் 38, ரிஷப் பண்ட் 128, வாஷிங்டன் சுந்தர் 24, ஆகாஷ் தீப் 13, பும்ரா 7*, துருவ் ஜுரல் 78 ரன்கள் எடுத்தார்கள்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 720 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. கிளன் பிலிப்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்தியா நியூசிலாந்தை 352 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தியா வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அதிக ஓவர்கள் வீச நேரம் இருப்பதால் இந்த போட்டியை வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -