இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி இருந்த போதும் நியூசிலாந்து அணி வலிமையான நிலையை எட்டி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ் மற்றும் ஜடேஜா இடத்திற்கு அன்சூல் காம்போஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்றார்கள்.
நியூசிலாந்து இன்னைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த கேப்டன் டாம் லாதமை ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா அனுப்பி வைத்தார். தொடர்ந்து டெவோன் கான்வேவை 4 ரன்னில் அன்சூல் காம்போஜ் வீழ்த்தினார். இதற்கடுத்து ரச்சின் ரவீந்தராவை 15 ரன்னில் ஆகாஷ் தீப் வெளியேற்றினார்.
இதைத் தொடர்ந்து டேரில் மிட்சல் 1, டாம் ப்ளூன்டல் 5 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்கள். நியூசிலாந்து அணி 70 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து சிக்கிக் கொண்டது.
இந்த நிலையில் தொடர்ந்து விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் சதம் அடித்து 113 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 94 ரன்கள் எடுத்து களத்தில் நின்று நியூசிலாந்து அணியை காப்பாற்றியிருக்கிறார்கள். இன்று முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருக்கிறது. பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.






