நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்களின் அதிரடி பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார்.
போட்டியின் தொடக்கத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். ஆனால் இறுதியில் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தியது.
இந்தச் சூழலில் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து பேசும்போது “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரன்கள் எடுக்காததாலும், ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்கள் சேர்க்காததாலும் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம் என்று நான் உணர்கிறேன். எனவே அவர்கள் இதை மிகவும் ரசித்திருப்பார்கள். அவர்கள் சிறப்பான ஷாட்களை விளையாடினார்கள். அவர்களுக்கு டெக்னிக் இல்லையென்றாலும், குறிப்பாக ஃபிஃப்டி-ஓவர் பார்மட்டில் தங்கள் பேட்டிங்கை ரசிக்கிறார்கள். நீங்கள் பேட்டை வீச வேண்டும், எத்தனை ரன்கள் அடித்தாலும் அது நல்லதுதான், அதுதான் அங்கே நடந்தது” என்று கூறியிருக்கிறார்.
”இது டிரஸ்ஸிங் ரூம் சூழலை மேம்படுத்துகிறது. அனைவரும் சிரிக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் சிக்ஸர்கள் அடிக்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. இது அணியின் மனநிலையை உயர்த்துகிறது. 190 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தால் ரன்கள் போதாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இருப்பினும் 200 ரன்களைத் தாண்டியதால் அது உளவியல் ரீதியாகவும் உதவியது. மிட்செல் சான்ட்னர் கூட அதை ரசித்துக்கொண்டிருந்தார். அங்கே ஓடி ரன் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, இல்லையென்றால் நம்பர் 10 மற்றும் 11 வீரர்களுக்கு இடையே எப்போதும் ரன் ஓடுவதில் குழப்பம் இருக்கும், ஏனெனில் அவர்கள் இணைந்து அரிதாகவே பேட்டிங் செய்கிறார்கள்.” என்று தொடர்ந்து,
”நாம் அதனால்தான் வெற்றி பெற்றோம். அணியில் உள்ள அனைவரும் ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் பந்து பவுன்ஸ் ஆவதைப் பார்க்கும்போது, நம்பர் 10 மற்றும் நம்பர் 11 பேட்ஸ்மேன்கள் கோட்டுக்குப் பின்னால் சென்று இங்கே அங்கே ஓட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே இது சற்று ரசிக்கத்தக்கதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்






