இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பிறகு, இளம் வீரர் நமன் திர் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பாராட்டி பேசி இருக்கிறார்.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் நமன் திர் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் திறமை குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் நமன் திர் செயல்பாடு குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “நமன் திர் ஒரு சிறந்த பேக்கேஜாக வெளிப்பட்டு வருகிறார். அவர் ஒரு அற்புதமாக ஃபீல்டிங் செய்பவர், மேலும் பேட்டிங்கில் இறங்கினால் உங்களுக்கு 20 முதல் 30 ரன்கள் வரை உறுதியாகப் பெற்றுத் தருவார். பந்துவீச்சிலும் அவர் எப்போதும் 3 முதல் 4 ஓவர்கள் வீசி அதில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார். அவரிடம் விக்கெட் வீழ்த்தும் திறமையும் அதிர்ஷ்டமும் உள்ளது. 7 அல்லது 8-வது வரிசையில் களமிறங்க அவர் ஒரு சரியான பேக்கேஜ் ஆவார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் மேலும் பேசும்போது “நியூசிலாந்து அணி 82 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இந்தியாவை வெற்றி பெறச் செய்வதில் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இருவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். இந்திய அணியின் ஷார்ட் பால் தந்திரம் நன்றாக வேலை செய்தது. சிராஜ் திடீரென்று எங்குிருந்தோ ஒரு மேஜிக்கான டெலிவரியை வீசுவது அவருக்கு மிகப்பெரிய பலமாகும். இதுபோன்ற கண்டிஷன்களில் டெஸ்ட் போட்டிகளுக்காக அர்ஷ்தீப் சிங்கை இந்தியா யோசிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், பும்ராவும் சிராஜும் நியூசிலாந்து பேட்டிங்கை சரித்து விடுவார்கள். நியூசிலாந்து இந்த தொடரில் தடுமாறும், இந்தியா மிகச் சிறப்பாக செயல்படும்” என்று கூறி இருக்கிறார்.






