அபிஷேக் வேற மாதிரி தங்கம்.. அவர்கிட்ட இதை மட்டும் எதிர்பாக்காதீங்க – ரவி சாஸ்திரி பாராட்டு

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தியது குறித்தும், அவரது அதிரடியான பேட்டிங் ஸ்டைல் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

​வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா வெறும் 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். தொடக்க முதலே எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

- Advertisement -

​இந்திய அணியின் இந்த பிரம்மாண்டமான வெற்றி மற்றும் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ரவி சாஸ்திரி அவரது பேட்டிங் திறமையை சிலாகித்துத் தள்ளியுள்ளார்.

​இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்போது “அவர் வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கடித்தார், இதன் மூலம் அவர் தன்னை இந்த ஆட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதை வெளிப்படுத்தினார். ஆஃப்-சைடில் அவர் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. எங்குமே தளர்வான பந்துகளை அவர் விட்டுவிடுவதில்லை. மைதானத்தின் திசைகளை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஷாட்களை ஆடுகிறார். இது ஒரு பிரமாதமான இன்னிங்ஸ் ஆகும். அவரிடம் சிறந்த மணிக்கட்டுத் திறன் உள்ளது. ஸ்கொயர் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருக்கும்போது, அவர் பந்தைச் சரியாகத் தப்பாவிட்டாலும் கூட அது சிக்சர்தான் போகும். அவர் ஒரு மிகவும் ஆபத்தான வீரர், அணிகள் அவருக்கு எதிராகத் திட்டமிட முயன்றாலும் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து ரவி சாஸ்திரி பேசும்போது “அவருடைய பேட் ஸ்விங் மிகவும் அற்புதமானது மற்றும் அவர் எந்தவித டென்ஷனும் இன்றி சுதந்திரமாக பேட்டிங் செய்கிறார். அவர் சில சமயங்களில் தொடக்கத்திலேயே அவுட் ஆனாலும், மூன்றாவது இன்னிங்ஸில் இதுபோன்று வெளுத்து வாங்குவார். இதுவே போதுமானது. இதுபோன்ற அதிரடி வீரரிடம் இருந்து ஒவ்வொரு போட்டியிலும் ஒரே மாதிரியான நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -