சூரியவன்சி இதை பேசினால் தான் சந்தோசமா இருப்பான்.. ஆனா பீல்டுக்கு உள்ள வந்துட்டா ஆளே மாறிடுவான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
0

​இளமை மற்றும் திறமை மிகுந்த இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் வெளியிட்ட கருத்துகள் தற்பொழுது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

​சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெற்றிருந்தார். மைதானத்திற்கு வெளியே மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட அவர், களத்தில் மிகக் கடுமையான அதிரடியைக் காட்டும் நபர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.

- Advertisement -

​உலகக்கோப்பை வென்ற தொடக்க ஆட்டக்காரர்கள் அணியில் இருக்கும் காரணத்தால் அவருக்கு இன்னும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டை அவர் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

​இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் பேசும்போது, “மைதானத்திற்கு வெளியே அவரது லைஃப்ஸ்டைல், குடும்பம் மற்றும் அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர் ரொம்பவே மகிழ்ச்சியடைகிறார். ஏனென்றால் அதைப் பற்றிப் பேசும்போதுதான் அவர் இயல்பாக இருக்கிறார். அவர் மிகவும் அமைதியான ஒரு நபர், ஆனால் ஃபீல்டிற்குள் இறங்கிவிட்டால் மிகவும் அக்ரசிவ் மற்றும் டிஸ்ட்ரக்டிவ் ஆக மாறிவிடுகிறார்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் சூர்யவன்ஷியின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து பேசும்போது, “எனக்குத் தெரியும், அவருடைய நேரம் நிச்சயமாக வரும். ஏனென்றால் இப்போது நாம் உலகக்கோப்பை வென்ற ஓப்பனர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம், அவர்களுக்கான நேரத்தை அவர்கள் பெற தகுதியானவர்கள். வைபவ் இன்னும் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் இருக்கிறார். அதனால் நிச்சயம் அவருடைய நேரம் வரும்போது, அவர் இந்திய கிரிக்கெட்டை டாமினேட் செய்வார்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -