வைபவால்தான் தன் இடம் பறிபோனதா.? நானா இருந்தா இப்படித்தான் யோசிப்பேன் – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

0
2

இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு சில போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதே நேரத்தில், இளம் வீரர் ஒருவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அணியில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. குறிப்பாக அந்த வீரர் 700–800 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்ததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் தனது நிலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தான் 2–3 போட்டிகளில் பெரிய அளவில் செயல்படாத நிலையில், மறுபுறம் அந்த வீரர் நல்ல பார்மில் இருந்ததால் அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் கூறும்போது: “இந்திய அணியை நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. 15 வயது சிறுவன் ஒருவர் 700–800 ரன்கள் அடித்துவிட்டு வந்திருக்கிறார். எனக்கு முன்பாக நடந்த தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. அதன்பிறகு அவர் மிகவும் நன்றாக விளையாடினார். எப்படியாவது அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் 2–3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, அவரும் நல்ல நிலையில் இருந்தார். அந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்பதால், தலைமைப் பொறுப்பில் இருந்து பார்க்கும்போது அந்த முடிவு புரிந்துகொள்ளக்கூடியதுதான். நானும் ஐபிஎல் அணியில் கேப்டனாக இருந்தபோது இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -