2027 உலக கோப்பையில் ஸ்ரேயாஸ் இடத்துக்கு புதிய வீரர்.. கம்பீர் போடும் மாஸ்டர் பிளான் – வெளியான தகவல்கள்

0
0

​அடுத்து வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய தேர்வுக்குழுவின் திட்டத்தில் இளம் வீரர் திலக் வர்மா சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தவும், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பேக்-அப் வீரராகவும் அவரை தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

​திலக் வர்மா ஒரு லெப்ட் ஹேண்ட் பேட்டர் என்பதால் அணியில் வலது கை பேட்டர்கள் நிறைந்திருக்கும் சூழலில் இது சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் அவரும் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின் பவுலிங் செய்யக்கூடியவர் என்பதால் அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

​அணியின் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் வயது மற்றும் பிட்னஸ் சிக்கல்களை மனதில் கொண்டு, தேர்வுக்குழுவினர் இளமையான இளம் வீரர்களை உலகக் கோப்பைக்காக இப்பொழுதே தயார் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

​இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்போது “ஹெட்கோச் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகிய இருவரும் மிடில் ஆர்டருக்கு சரியான பேக்-அப் வீரர்கள் இல்லை என்பதை உணர்ந்துள்ளனர், ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் ரெட்டிக்கு பிட்னஸ் பிரச்சனைகள் இருப்பதால் டாப் ஆர்டரில் இருந்து நான்கு ஓவர்கள் பவுலிங் செய்யக்கூடிய ஒரு வீரரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “உலகக் கோப்பைக்காக அணி நிர்வாகம் முன்கூட்டியே தயாராக வேண்டும், ஆஸ்திரேலிய தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதுடன் வேகப்பந்துக்கு எதிரான அவரது ஆட்டமும் இன்னும் சோதிக்கப்படவில்லை, எனவே இளம் வீரர்களை பேக்-அப்பாக தயாராக வைத்திருக்க வேண்டும் என அணி நிர்வாகம் நினைக்கிறது” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -