இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் வீரர் கேஎல்.ராகுல் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி எட்டு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. டெல்லி பவர் பிளேவில் மூன்று விக்கெட்டை இழந்தாலும் வேகமாக ரன் எடுத்தது. கேஎல் ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அரை சதம் அடித்தார்கள். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது டேவிட் மில்லர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
விராட் கோலி திருப்தியாக இல்லை
இந்த போட்டி குறித்து பேசிய கேஎல் ராகுல் கூறும் போது “இந்த போட்டியில் ஆரம்பத்தில் ஆடுகளத்தில் வேகம் கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. விராட் கோலி மற்றும் சால்ட் இருவரும் இதில் திருப்தியாக இல்லை என்று பார்த்தபோது தெரிந்தது. ஆனால் பவர் பிளேவில் நாங்கள் மூன்று விக்கெட் இழந்ததால் இது எளிதாக இல்லை. ஆனால் ஒட்டு மொத்தத்தில் இது நல்ல போட்டி”
“நாங்கள் மூன்று விக்கெட்டை இழந்ததும் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் ஷாட் ஆட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே நேரத்தில் நீங்கள் இந்த ஆடுகளத்தில் பாதுகாப்பாக விளையாடிய ரன் எடுக்கவில்லை என்றால் இறுதி கட்டத்தில் மிகவும் கடினமாகிவிடும். எனவே நாங்கள் ஒரு பக்கத்தில் ரன் ரேட்டை கவனத்தில் வைத்துக் கொண்டோம்”
ஓவருக்கு ஓவர் பார்த்தோம்
“இதன் காரணமாக ஒவ்வொரு ஓவரையும் தனித்தனியாக எடுத்து தேவையான ரன்னை அடிக்க முடிவு செய்தோம். நான் மற்றும் ஸ்டெப்ஸ் இருவருமே தேவைக்கு தகுந்த வேகத்தில் தொடர்ந்து விளையாடினோம். அவர் கடைசி வரை களத்தில் இருந்து முடித்தார்”
இதையும் படிங்க : இப்ப டெல்லி கூட தோல்வி எங்களுக்கு பிரச்சனையே கிடையாது.. எங்க பவுலர்கள்கிட்ட நான் சொன்னது இதுதான் – ரஜத் படிதார் பேச்சு
“டேவிட் மில்லர் களத்தில் இருந்தபோது இந்த போட்டியை முடித்து விடுவார் என்று எங்களுக்கு உறுதியாகவே தெரியும். மேலும் கடைசி ஓவருக்கு சுயாஸ் ஷர்மா இல்லை செப்பர்டு இருவரில் ஒருவர் வர வேண்டும் என்றும் தெரியும். எனவே நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தோம்” என்று கூறியிருக்கிறார்.






