இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியை வெற்றி பெறும் என அந்த அணியின் க்ருனால் பாண்டியா கூறியிருக்கிறார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று களத்தில் சகோதரர்கள் இருவரும் தங்கள் அணிகளுக்காக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். இது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்சிபி வெல்லும்
கடந்த முறை இதே மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட பொழுது கடைசி ஓவரை வீசிய க்ருனால் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். இன்றும் அதே நடக்கும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “சிறந்த அணி வெற்றி பெறும். அந்த சிறந்த அணி ஆர்சிபி. எதுவும் மாறப் போவதில்லை. நாங்கள் சிறந்த போட்டியாளர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் முடிவில் நாங்கள் சகோதரர்கள். எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் கொடுப்போம். சிறந்த அணியான ஆர்சிபி வெற்றி பெறட்டும்”
கடந்த முறை நடந்தது
“எங்களுக்கு அடுத்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த சீசனில் கடைசி ஓவரில் நாங்கள் அவர்களை வென்றோம். அந்த ஓவரை நான் பேசினேன். அது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. மும்பை மைதானத்தில் விளையாடுவது எப்பொழுதும் சிறந்த உணர்வு”
இதையும் படிங்க: சாம்சன் பற்றிய அந்த உண்மையை சிஎஸ்கே ஸ்ரீராம் சொன்னார்.. அவர் சதம் அடிக்க இதுதான் காரணம் – பத்ரிநாத் பேச்சு
“நான் மும்பை மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. கடந்த போட்டிகளுக்கு விளையாடிய பொழுது ஆர்சிபி ஆர்சிபி என பெரிய கோஷங்கள் கேட்டது. இந்த முறையும் அதே ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறந்த ஆட்டத்தை கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.






