நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக வைபவ் சூரியவன்சி 26 பந்தில் 78 ரன்கள் குவித்து, தனது அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றி குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டிகள் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 8 விக்கெட் இழப்புக்கு 21 இடங்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இழப்பை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீக்கிரம் கிளம்ப வேண்டும்
இந்த போட்டி குறித்து வைபவ் சூரியவன்சி பேசும் போது “இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற காரியங்களில் நாங்கள் ஈடுபட போவதில்லை சார். ஏனென்றால் எங்களுக்கு அடுத்த போட்டிக்கு கிளம்ப அதிகாலையிலேயே ஒரு விமானம் இருக்கிறது. எனவே நாங்கள் அதை பிடிப்பதற்காக சீக்கிரத்தில் கிளம்ப வேண்டும்”
“தற்போது என் வழிகாட்டிகளாக என் அப்பா மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்த அணியில் ரோம் சார் இருக்கிறார். இவர்கள் அனைவருமே இது நீண்ட பயணம் நான் தொடர்ந்து என்னுடைய தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நான் என்னுடைய வேலைகளை தொடர்ந்து கடினமாக செய்கிறேன்”
நான் அவுட் ஆகக்கூடாது
“நான் அதிரடியாக விளையாடவில்லை. என்னுடைய இயல்பில்தான் விளையாடுகிறேன். நான் வலையில் என்ன பயிற்சி செய்கிறேனோ அதைத்தான் களத்தில் வந்து ஆடுகிறேன். அதிரடியாக விளையாட வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. மேலும் நான் பவுலர்களை பார்ப்பதில்லை. பந்தை மட்டுமே பார்த்து விளையாடுகிறேன்”
இதையும் படிங்க : எம்எஸ் தோனியை விட.. இந்த 2 சிஎஸ்கே பிளேயர்ஸ் கூட நான் நேரம் செலவிட விரும்புகிறேன்.. சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரவிஸ்
“மேலும் நான் இன்னும் கொஞ்ச நேரம் அவுட் ஆகாமல் விளையாடினால் 20 ரன்கள் எடுக்க முடியும். இதன் மூலம் இன்னும் கூடுதலாக இரண்டு ஓவர்களில் போட்டியை முடிக்க முடியும். முதலில் பேட்டிங் செய்வதாக இருந்தால் கூடுதலாக ஒரு இருபது ரன்கள் எடுத்த முடியும். எனவே நான் இதற்கு ஏற்ற வகையில் ஆட்டம் இழக்காமல் ஆட வேண்டும். நான் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்ததாக தோன்றுவதால் நான் சோகமாக வெளியேறுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






