எம்எஸ் தோனியை விட.. இந்த 2 சிஎஸ்கே பிளேயர்ஸ் கூட நான் நேரம் செலவிட விரும்புகிறேன்.. சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரவிஸ்

0
63

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடக் காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டெவால்ட் பிரவிஸ் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுடன் தான் செலவிட்ட நேரம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்றைய போட்டியில் இருந்து தங்களது வெற்றி கணக்கை துவங்க வேண்டும். தற்போது சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக கடந்த சீசனில் கலக்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் டெவால்ட் பிரவிஷ் காயம் காரணமாக கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாத நிலையில் இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல எம்எஸ் தோனியும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளி வருகின்றன. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அஸ்வினின் யூடுப் சேனலுக்கு பேட்டி அளித்த டெவல்ட் பிரவிஸ் சிஎஸ்கே அணியில் தான் செலவிட விரும்பும் இரண்டு வீரர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதேபோல ஐபிஎல் தொடரில் தனது அனுபவங்கள் குறித்தும் நகைச்சுவையாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “சிஎஸ்கே அணியில் புதிதாக வந்திருக்கும் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோருடன் நான் நேரம் செலவிட விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் இருவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. அவர் தங்களது வழிகளை தாங்களே கண்டுபிடிப்பார்கள். அவர்கள் மிகவும் இளம் வயதினர். சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதே நிலையில் இருந்தேன். எனவே அவர்கள் தங்களது இயல்பை கண்டறிந்தால் போதும்.

அதேபோல ஸ்ரேயாஸ் ஐயர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஐபிஎல் இல்லாத சமயங்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதை நான் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர் மிகவும் தரமான ஒரு வீரர். அதேபோல மும்பை அணியின் திலக் வர்மா என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கிறார் அவர் தென் ஆப்பிரிக்காவில் எங்கள் குடும்ப வீட்டிற்க்கே வந்துள்ளார். அவருடன் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் என்பதை எனது விருப்பம். ஆனால் மும்பை அணி அவரைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -