நாளை மறுநாள் தொடங்க இருக்கும் 19ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தோனி என்ன மாதிரியான பங்களிப்பை கொடுக்க வேண்டும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி சில போட்டிகளில் நேரடியாக விளையாடுவார் எனவும், சில போட்டிகளில் தேவைப்பட்டால் இம்பேக்ட் பிளேயராக வருவார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைச் செய்யக் கூடாது
தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சிஎஸ்கே அணியில் பேட்டிங் நீளம் தோனி இல்லாமல் எட்டு வரையில் வரக்கூடியது. எனவே அவர் விரும்பும் படி கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் வந்து விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தோனி இம்பேக்ட் பிளேயர் ஆக மட்டும் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற்று விளையாட வேண்டும். ஒருவேளை முடியாது என்றால் அவர் முழு தொடரிலும் விளையாட கூடாது. இதுதான் சரியான முடிவாக இருக்கும்”
தோனியின் தேவை இதுதான்
“தற்போதுள்ள புதிய சிஎஸ்கே பவுலிங் யூனிட்டை களத்தில் வழி நடத்துவதற்கு தோனி மிகவும் தேவையானவராக இருப்பார். நானும் கடந்த ஆண்டு அங்கேதான் இருந்தேன். தோனி கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் மேல் வரிசை பல நேரங்களில் ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்ததால் அவர் முன்கூட்டியே களம் இறங்க வேண்டிய தேவை உருவானது”
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்சி சின்ன ஹல்க் மாதிரி.. பயிற்சியில் கூட பவுலர்கள் அவரைப் பார்த்து பயப்பட்டு இதை செய்வாங்க – ஜிதேஷ் சர்மா பேச்சு
“இந்த முறை அதை தவிர்ப்பதற்காக பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர் முழுக்க அதிக ஓவர்கள் விளையாட வேண்டிய தேவை மூன்று அல்லது நான்கு முறைதான் உருவாகும். மற்ற நேரங்களில் அவர் விரும்பும்படி கடைசியில் வரலாம். இதன் காரணமாக அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடி ருதுராஜுக்கு களத்தில் உதவியாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






