விராட் கோலி இல்லை.. ஆர்சிபில் என் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான்.. அந்த வேலையை செய்ய வச்சார் – குர்னால் பாண்டியா பேட்டி

0
1
Virat

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு தன்னாலும் சிறிய பங்களிப்பை கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி என குர்னால் பாண்டியா கூறியிருக்கிறார்.

மேலும் தான் ஆர்சிபி அணியில் இணைந்ததும் நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்று கூறியது நடந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆர்சிபி அணியில் தனது வெற்றிக்கு யார் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சொன்னது நடந்தது

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு குர்னால் பாண்டியா பந்துவீச்சு மிக முக்கிய காரணமாக இருந்தது.

இதுகுறித்து குர்னால் பாண்டியா கூறும்பொழுது ” 2022 ஆம் ஆண்டு நான் சொன்னது அப்படியே இப்பொழுது நடந்து இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதில் நானும் சிறிய பங்களிப்பு செய்திருக்கும் முடிந்ததில் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான்”

- Advertisement -

இவர்தான் வெற்றிக்கு காரணம்

“எங்கள் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் மலோலன் அவர்களுக்கு எனது வெற்றியின் முழு கிரடிட்டையும் கொடுக்க வேண்டும். ஒரு வீரராக உங்களுக்கு சில விஷயங்கள் நன்றாக செல்லும் என்று தெரியும். ஆனாலும் அதற்கு பயிற்சியாளர் குழுவில் இருந்து உங்களுக்கு யாராவது தொடர்ந்து நல்ல நம்பிக்கையை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் வெற்றி நம்ம ஆளுங்க கையில இல்ல.. இது நடக்கலனா தோல்விதான் – முரளி விஜய் பேட்டி

“எனது பந்துவீச்சில் பவுன்சர் போடவும் மற்றும் மெதுவாக வீசவும் அவர் தொடர்ந்து எனக்கு ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் என்னுடைய விளையாட்டுப் புரிதலை மிகவும் மதித்து ‘நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை தைரியமாக செய். அதில் நீ பின்னடைவு கொள்ள வேண்டாம்’ என்று ஆதரவு கொடுத்தார். இது எனது வெற்றிக்கு மிக முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -