விராட் கோலியை ஆர்சிபி அணியில் எந்த வீரரும் இந்த விஷயத்தில் ஏமாற்ற முடியாது.. அவர் விடவே மாட்டார் – முகமது கைஃப் பேச்சு

0
22
Kaif

இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு விராட் கோலி எப்படி வருவார்? அவர் தனது அணி வீரர்களை எப்படி கவனிப்பார்? என்பது குறித்து முகமது கைஃப் பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்காக விராட் கோலி 18 வருடங்களாக காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்திருப்பதால் இரண்டாவது முறையாகவும் கோப்பையை வெல்ல அவர் விரும்புவார்.

- Advertisement -

விராட்டுக்கு நல்லதுதான்

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதன் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து அவர் கொஞ்சம் அடிக்கடி தள்ளி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இது பின்னடைவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” விராட் கோலி அதிகம் கிரிக்கெட் விளையாடாதது அவருக்கு பாதிப்பாக இருக்காது. சொல்லப்போனால் அது அவருக்கு நன்மையாகவே முடியும். ஏனென்றால் அவர் புத்துணர்ச்சியாக வருவார். மேலும் தற்போது அவரது ஆட்டம் அதிரடியாக மாறி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் ஒய்வுக்குப் பிறகு தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு அவர் பதில் அளிக்க விரும்புகிறார்”

- Advertisement -

விராட் கோலி விடமாட்டார்

“விராட் கோலி அணியில் எந்த அலட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். சாம்பியன் பட்டம் வென்று இருந்தாலும் இந்த தொடரை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார். அவர் எப்பொழுதும் ஜீரோவில் இருந்து ஆரம்பிப்பார். அணியில் எந்த வீரராவது முழு ஆற்றலையும் முயற்சியையும் வெளிப்படுத்த வில்லை என்று அவர் நினைத்தால் ‘நாம் இங்கு ஜெயிக்க வந்திருக்கிறோம்’ என்று நினைவுபடுத்தும் முதல் நபராக அவரே இருப்பார்”

இதையும் படிங்க : அபிஷேக்குக்கு நடந்தது சூரியவன்சிக்கும் நடக்கப்போகுது.. தம்பி இதை மட்டும் செய்யக்கூடாது – இர்பான் பதான் அறிவுரை

” அவர் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் பொழுது மற்ற வீரர்கள் யாரும் பயிற்சியையோ அல்லது போட்டியையோ எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் கோப்பையை வெல்வதை தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டார். கமிட்மெண்ட் விஷயத்தில் எல்லோரையும் அலர்ட் ஆக வைத்திருப்பார். அவர் மிகவும் பசியோடு இருக்கக்கூடிய ஒரு வீரர். அதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சென்று விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -