அபிஷேக்குக்கு நடந்தது சூரியவன்சிக்கும் நடக்கப்போகுது.. தம்பி இதை மட்டும் செய்யக்கூடாது – இர்பான் பதான் அறிவுரை

0
3
Irfan

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வைபவ் சூரியவன்சிக்கு எளிதாக இருக்காது எனவும் அதே சமயத்தில் அவர் அதை சமாளிப்பார் எனவும் இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வைபவ் சூரியவன்சி மிகப்பெரிய சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் ஒவ்வொரு தொடரிலும் சதம் அடிப்பதோடு சிக்ஸர்கள் அடிப்பதிலும் தனி சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவுக்கு நடந்தது

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக அவரது பலவீனத்தை துல்லியமாக கண்டுபிடித்து எதிரணிகள் திட்டத்தை வகுத்து வந்தன. இதனால் அபிஷேக் ஷர்மா ரன்கள் எடுக்க முடியாமல் மிகவும் தடுமாறினா. இறுதிப் போட்டியில் மட்டுமே அவரால் இயல்பான முறையில் அதிரடியாக விளையாட முடிந்தது.

இதே போல இந்த ஐபிஎல் தொடரில் வைபவ் சூரியவன்சிக்கு எதிராக எதிர் அணிகள் சிறந்த திட்டத்துடன் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. ஆனால் வைபவ் சூரியவன்சி சூழ்நிலைக்கு தகுந்தது போல் விளையாடக் கூடியவராக தெரிகிறார்.

- Advertisement -

சவால்கள் வரும்

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” நிச்சயம் வைபவ் சூரியவன்சிக்கு சவால்கள் வரும். அபிஷேக் ஷர்மாவுக்கு என்ன நடந்ததோ அது நடக்கும். ஆனால் இந்த பையனிடம் நல்ல பவர் இருக்கிறது. அவர் விளையாடிய எல்லாத் தொடர்களிலும் ரன்கள் எடுத்து வருகிறார். இந்த முறை அவர் எல்லா போட்டிகளிலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். எனவே அவருக்கு இது பெரிய திருப்புமுனை தொடராக இருக்கும்”

இதையும் படிங்க : பைவப் சூரியவன்சி இல்லை.. இந்தப் பையனுக்கு தான் இந்த ஐபிஎல் சீசன் வேற மாதிரி இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

“வைபவ் சூரியவன்சிக்கு எந்த விஷயமும் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். அவர் வெறும் 15 வயதான இளைஞன் என்று நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு 20 ஆண்டுகள் நீளமான கிரிக்கெட் வாழ்க்கை இருக்க போகிறது. தற்போது நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடுவது முக்கிய விஷயமாக இல்லாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் இப்படிப்பட்ட ஒருவர் வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -