நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இருந்து சில முக்கியமான விஷயங்களை தான் கற்றுக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய குரு யுவராஜ் சொன்ன ஒரு விஷயத்தை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் அபிஷேக் ஷர்மா கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார். அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் 18 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
நான் கற்றுக் கொண்ட பாடம்
இது குறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது ” மன வலிமையும் செயல்முறையும் எவ்வளவு முக்கியம் என்பதை உலக்கோப்பை உங்களுக்கு சீக்கிரத்தில் கற்றுக் கொடுக்கும். ஒரு நல்ல ஆட்டத்திற்கு பிறகு அதிகம் உற்சாகமடையாமலும், ஒரு மோசமான ஆட்டத்திற்குப் பிறகு துவண்டு போகாமலும் இருக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்”
” இந்தத் தொடர் முழுக்க எனக்கு கேப்டன் சூர்யா குமார் யாதவ் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார். நான் ஒவ்வொரு முறை டக் அவுட் ஆகும் பொழுதும் அவர் கொடுத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரியதாக அமைந்தது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் உங்களுக்கு பின்னால் இருக்கும் பொழுது நீங்கள் மீண்டு வர முடியும்”
யுவி பாஜி அறிவுரை
“எனக்கு நேர்மையான அறிவுரைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் உடனடியாக யுவி பாஜியிடம் தொடர்ந்து பேசுவேன். அவர் எனக்கு சொல்லும் செய்தி மிகவும் எளிமையானது. ஒரு வீரராக நீங்கள் யார் என்பதை மாற்றிக் கொள்ளாதீர்கள், ஆக்ரோஷமாக விளையாடும் வீரர்களுக்கு இது போன்ற கட்டங்கள் வரும், ஆனால் உங்கள் பலத்தை நீங்கள் தொடர்ந்து நம்பினால், உங்களுக்கு ரன்கள் வரும் என்று கூறினார்”
இதையும் படிங்க : தோனி சாம்சனுக்கு இந்த தப்பை செய்ய மாட்டார்.. காரணம் அவருக்கு இங்க 2 விஷயம் தெரியாது – முகமது கைப் பேச்சு
“இது போன்ற ஒரு அனுபவங்கள் உங்களை ஒரு வீரராக உருவாக்குகின்றன. இவ்வளவு பெரிய தொடரில் நீங்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் பொழுது உங்கள் குறித்து நீங்களே கற்றுக் கொள்கிறீர்கள். இது என்னை ஆட்டத்தை அணுகும் முறையில் முதிர்ச்சி உள்ளவனாக மாற்றும் என்று நம்புகிறேன். இந்த அனுபவங்களை எடுத்துக்கொண்டு ஒரு வீரராக முன்னேறி செல்வதே என்னுடைய இலக்கு” என்று கூறி இருக்கிறார்.






