தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு ஒரு தவறை செய்யாது என முகமது கைப் உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த மாதம் இறுதியில் மார்ச் 28ஆம் தேதி 19 வது ஐபிஎல் சீசன் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு சிஎஸ்கே அணிக்கு விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனா?
சிஎஸ்கே அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் சுமாராக செயல்பட்டு வரும் ருதுராஜ் மாற்றப்படுவாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
அதே சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அடிக்கடி மாற்றங்களில் ஈடுபடாது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். தற்போது சஞ்சு சாம்சன் 30 வயதை கடந்தவராக இருப்பதால், அவருக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் நினைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தவறை செய்யாது
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது “தற்போது சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் தவறை உறுதியாக சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்யாது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அதேவேளையில் கேப்டனாகவும் செயல்பட விரும்ப மாட்டார். மேலும் அவர் இப்போது தான் அணிக்கு வந்திருக்கிறார்”
இதையும் படிங்க : விராட்டுக்கு அது தன்னால முடியாதுனு நல்லா தெரியும்.. 2025 ஐபிஎல்லை எடுத்து பாருங்க புரியும் – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு
“தற்போது அவருக்கு சிஎஸ்கே அணி குறித்து முழுமையான விஷயங்கள் எதுவும் தெரியாது. சேப்பாக்கம் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களை எப்படி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரியாது. இத்துடன் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் சிஎஸ்கே அணியின் தொடர்பு என்ன என்பதும் தெரியாது. எனவே அவரை கேப்டனாக கொண்டு வர மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.






