நேத்து தோனி பாய் கிட்ட பேசினேன்.. என்னை நேர்ல சந்திக்க வர வேண்டாம்னு சொல்லிட்டாரு – தீபக் சஹர் வெளியிட்ட தகவல்

0
12
Dhoni

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் சகர் தோனியிடம் சமீபத்தில் பேசும்போது என்ன கூறினார் என சொல்லி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய வெற்றிகளில் தீபக் சகர் அங்கம் வகித்தார். இந்த நிலையில் கடந்த மெகா ஏலத்தின் போது அவரை சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வாங்க முடியவில்லை. இந்த நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

- Advertisement -

தோனியின் செல்லப்பிள்ளை

சிஎஸ்கே அணியில் தீபக் சகர் இருந்த பொழுது அவர் தோனியின் செல்ல பிள்ளையாக இருந்து வந்தார். மற்ற வீரர்களை விட அவர் தோனியிடம் அதிக நெருக்கத்தைக் கொண்டிருந்தார். அணியின் பேருந்து பயணத்தில் கூட இருவரும் ஒரே இருக்கையில் அமருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியும் தீபக் சகரிடம் நிறைய நகைச்சுவைகளில் ஈடுபடுவார். தோனி இவரிடம் கிண்டலில் ஈடுபட்ட நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உண்டு. இவர்களையும் சமீபத்தில் தீபக் சகர் தோனியிடம் பேசும் பொழுது அவர் என்ன கூறினார் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

வரவேண்டாம் என்று சொன்னார்

இந்த உரையாடலில் தீபக் சகரிடம் வழக்கம்போல் தோனி நகைச்சுவையான முறையில் பேசி இருக்கிறார். தீபக் சகரை தான் மிஸ் செய்யவில்லை எனவும், நேரில் சந்திக்க நீ வர வேண்டாம் என்றும் கூறி கிண்டல் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியாவின் டிஎன்ஏ கோப்பையை வெல்வது.. எங்கள் டிஎன்ஏ தோற்று வெளியேறுவது – பாகிஸ்தான் ரசித் லத்தீப் பேட்டி

இது குறித்து தீபக் சகர் பேசும்போது “நான் நேற்று தோனி பாயிடம் பேசினேன். நான் சிஎஸ்கே வீடியோக்களை பார்த்தேன் உங்களை தவற விடுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் உன்னை மிஸ் செய்யவில்லை என்று சொன்னார். நான் அவரிடம் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் என்றேன். நீ சந்திக்கவே வராதே என்று சொல்லிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -