அபிஷேக் ஹாட்ரிக் டக் அடிச்சது நல்ல விஷயம்தான்.. இந்தியா டீமை மாத்தாத காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி பேச்சு

0
7
Abhishek

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா மூன்று டக் தொடர்ந்து ஆனது இந்திய அணிக்கு நல்ல விஷயம்தான் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

நாளை இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற இருக்கிறது. இரண்டு அணிகளுமே பெரிய அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

அபிஷேக் விஷயம் நல்லதுதான்

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “அபிஷேக் ஷர்மா மூன்று முறை தொடர்ந்து டக் அவுட் ஆகி இருப்பதை நான் நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். பெரிய போட்டிகளுக்கு அவருடைய தலை சிறந்த ஆட்டத்தை அவர் தேக்கி வைத்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகிறது. அவர் இதுவரை நான் எடுக்காததால் மற்ற அணிகள்தான் கவலைப்பட ஆரம்பித்திருக்கும்”

“அதே சமயத்தில் இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடுகிறார்கள். சூரியகுமார், இஷான் கிஷான் என யாராவது ஒருவர் நல்ல முறையில் பேட்டிங் செய்கிறார்கள். திலக் கூட நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து இன்னும் பெரிய ரன்கள் வர வேண்டியது உள்ளது”

- Advertisement -

இந்திய அணி மாறாது

“மழை இருந்தால் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் அணியில் தேவையாக இருப்பார். ஒன்று ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களையும் வீச வேண்டும். இல்லையென்றால் சிவம் துபே, திலக் வர்மா போன்றவர்கள் உள்ளே வருவார்கள். இப்படியான விருப்பங்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணியை மாற்ற மாட்டார்கள்”

இதையும் படிங்க : அபிஷேக் ஒரு வருஷமா எங்களை காப்பாற்றினார்.. இப்ப எங்க முறை.. நீங்க கவலைப்படாதீங்க – சூரியகுமார் பேட்டி

“இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டு அணிகளிடமும் பேட்டிங் ஆழமாக உள்ளது. இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்வதால் போட்டிக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டியும் சிறப்பானதாகவே இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -