டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்க அணிகள் மோத இருக்கின்றன. இந்திய அணி t20 தொடரில் விளையாட போகும் முதல் போட்டி இதுவாகும்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியை அமெரிக்க அணியோடு எதிர்கொள்ள உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் அதிகம் செலுத்தும் இந்திய அணி இந்த முறையும் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பதை அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் அல்லது இசான் கிஷன் களமிறங்குவாரா? என்பது தற்போது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெற்ற இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரே தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் மூன்றாவது வரிசை வீரராக திலக் வர்மா வருவதால் சஞ்சு இந்தப் போட்டியில் வாய்ப்பு பெறுவாரா? அல்லது இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குவாரா? என்ற கேள்விகள் தற்போது எழுந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மூன்று இடது கை ஆட்டக்காரர்கள் களமிறங்குவதில் என்ன தவறு இருக்கிறது எனவும், கம்பீரின் வலது இடது காம்பினேஷன் ஒரு அளவுக்கு மேல் அது சரி வராது என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “மூன்று வலது கை வீரர்கள் தொடர்ச்சியாக வரும்போது மூன்று இடது கை ஆட்டக்காரர்கள் களம் இறங்குவதில் என்ன தவறு இருக்கிறது. அதில் எந்தத் தவறும் கிடையாது. முழு வலது இடது கை ஆட்டக்காரர்கள் காம்பினேஷன் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. அது குறிப்பிட்ட அளவிற்கு பரவாயில்லை. ஆனால் அதை ஒரு அளவிற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி பார்த்தால் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிரிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் பல ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.






