2026 பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பிளன் மெக்ராத் மற்றும் ஜேசன் கில்லஸ்பி தனது கணிப்பை கூறியிருக்கிறார்கள்.
இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு வரும் ஆஸ்திரேலியா அணி கொஞ்சம் பலவீனமாக காணப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
டேமியன் பிளமிங் – மெக்ராத் கணிப்பு
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேமியன் மார்ட்டின் டி20 உலகக் கோப்பைக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அவர் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டேமியன் பிளமிங் பேசும்பொழுது ” இந்திய அணியின் அபிஷேக் ஷர்மா சிறப்பான முறையில் விளையாடிஅதிக ரன்கள் குவித்தவராக வருவார். மேலும் இந்திய அணி இடம் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்துடன் பும்ராவும் இருக்கிறார். அவரால் போட்டியின் எந்த பகுதியிலும் சிறப்பாக பந்து வீச முடியும்” என்று கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இல்லை
கிளன் மெக்ராத் கூறும்பொழுது இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து என மூன்று அணிகளை தேர்ந்தெடுத்தார். இன்னொரு இடத்திற்கு பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து தேர்வாகலாம் என்று கூறியிருக்கிறார். இவர் தன்னுடைய ஆஸ்திரேலிய அணியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2026 டி20 உலக கோப்பை.. இந்த இரண்டு அணிகள்தான் பைனல் வரும்.. என் பேச்சு மாறாது – ஸ்ரீகாந்த் கணிப்பு
இதே போல கில்லஸ்பி இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அத்துடன் ஆச்சரியப்படும் விதமாக இலங்கை அணியையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். இலங்கை தங்கள் சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடரை விளையாடுவதால் அவர்களுக்கு சாதகம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.






