இந்த மாதம் வருகின்ற ஏழாம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்று மைக்கேல் வாகன் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் வந்தன. இந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது.
கூடுதல் போட்டிகள்
இந்த முறை டி20 உலக கோப்பை தொடரில் காலை, மதியம், மற்றும் இரவு என மூன்று நேரங்களில் மூன்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒரு பெரிய அணி விளையாடும் போட்டி இருப்பது ரசிகர்களை சுவாரசியமாக வைத்திருக்க உதவும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் நாளில் காலை 11 மணிக்கு பாகிஸ்தான், நெதர்லாந்து, மதியம் 3 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இரவு 7 மணிக்கு இந்தியா, அமெரிக்க அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நான்கு அணிகள்தான்
இந்த நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் செமி பைனலுக்கு வரும் என்று கணிப்பை தெரிவித்திருக்கும் மைக்கேல் வாகன் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரோகித் சர்மா மாதிரி வரது சூர்யாவுக்கு கஷ்டம்.. உலக கோப்பையை ஜெயிக்கிற இத செய்யணும் – இர்பான் பதான் பேச்சு
அதே சமயத்தில் கடந்த முறை இறுதிப் போட்டிக்கு வந்த தென் ஆப்பிரிக்க அணியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் உலகக்கோப்பை தொடர் ஆசியாவில் நடைபெற்ற பொழுதும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு அணிகளில் ஒன்றை கூட அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






