தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் இழந்திருக்கிறது. எனவே அடுத்து இந்திய அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரகானே அறிவுரை கூறியிருக்கிறார்.
கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது நியூசிலாந்து பி டீம் போல ஒரு அணியிடம் மீண்டும் இந்திய அணி ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் இழந்திருக்கிறது.
இதனால்தான் தோற்றீர்கள்
இதுகுறித்து ரகானே பேசும்பொழுது “இந்திய அணி கடந்த 9 ஒரு நாள் போட்டிகளில் 5 போட்டிகளை தோற்று இருக்கிறது. எனவே நிச்சயமாக கடினமான கேள்விகள் வரத்தான் செய்யும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களோடு மிகவும் இணைந்து உள்ளது. ரசிகர்கள் சொந்த மண்ணில் விளையாடும் போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்”
“தற்போது இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணம் அணியில் அடிக்கடி செய்து கொண்டே இருந்த மாற்றங்கள்தான். நீங்கள் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்றால் முதலில் வீரர்களுக்கு நம்பிக்கையையும் தெளிவையும் பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு சில வீரர்களை விளையாட வைக்க நினைத்தால் முதலில் அவர்களுக்கு தெளிவை கொடுங்கள்”
மரியாதையோடு சொல்கிறேன்
“நான் இந்த நியூசிலாந்து அணியை பற்றி மரியாதையோடு இந்த விஷயத்தை சொல்கிறேன். இந்தியா வந்திருக்கும் இந்த நியூசிலாந்து ஒரு நாள் அணி பி அல்லது சி டீம் போலத்தான் இருந்தது. எனவே இந்திய அணி தொடரை முழுமையாக வெல்லும் என எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் மாற்றி நியூசிலாந்து அபாரமாக வென்றது”
இதையும் படிங்க : எங்க டீம் கிட்ட இருந்த அந்த பழக்கம்.. இப்ப கம்பீர் கில் டீம் கிட்ட இல்ல.. சப்பையா இருக்கு – அஸ்வின் வருத்தம்
“நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள் கழித்துதான் ஒருநாள் கிரிக்கெட் விளையாடப் போகிறீர்கள். அப்போது நம்பிக்கை வைத்து எந்த வீரரை தேர்வு செய்து விளையாடப் போகிறீர்கள் என்பதில் இப்பொழுதே நீங்கள் தெளிவாக இருங்கள். நீங்கள் இதற்கு மேல் உங்களுக்கு சரியான வீரர் யார்? சரியான கூட்டணி யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






