தற்போது இந்திய அணி நிர்வாகம் தவறான பவுலிங் யூனிட்டை தேர்வு செய்து வருவதாகவும், இதனால் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தோற்கவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் முகமது கைப் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 284 ரன்கள் எடுத்திருந்த போதும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பையை வெல்ல முடியாது
இது குறித்து முகமது கைப் பேசும்பொழுது “நீங்கள் அர்ஸ்தீப் சிங்கை அணியில் சேர்க்காமல் விடுகிறீர்கள். அவர்தான் விக்கெட் எடுக்கக்கூடிய பவுலர். ஆனால் நீங்கள் பிரசித் கிருஷ்ணாவை வளர்க்க நினைக்கிறீர்கள். அவர் ஓரிரு போட்டிகளைத் தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ரன்களை கொடுக்கிறார்”
“யாராவது இந்திய அணி 280 ரன் எடுத்ததால் தான் தோல்வி அடைந்து விட்டது, இன்னும் இருபது ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று சொன்னால், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் 270 மற்றும் 280 ரன்கள் எடுத்தாலும் வெல்ல வேண்டும். நாம் பந்து வீச்சு மூலமாக வெற்றி பெறவும் கற்றுக் கொள்ள வேண்டும்”
இதில் கவனம் வேண்டாம்
“கிரிக்கெட் பொறுத்த வரையில் இரவு நேரத்தில் பனி என்பது பொதுவாக இருக்கக்கூடிய விஷயமாக. எனவே நீங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. பனிப்பொழிவு இருந்தாலும் நீங்கள் எப்படி வந்து வீசுகிறீர்கள் என்று கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: விராட் கோலி பத்தி மஞ்ச்ரேக்கர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது.. அது ஈஸியான வேலை இல்லை – ஹர்பஜன் சிங் கருத்து
தற்போது இந்திய ஒரு நாள் அணியில் முகமது சமியை சேர்க்காமல் தொடர்ந்து இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகமும், இந்தியத் தேர்வு குழுவும் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது மிடில் ஓவர்களில் விக்கெட் கைப்பற்றுவதற்கு ஆள் இல்லாமல் இருப்பது பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.






