இந்திய முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் விளையாடி வருவது குறித்து சர்ச்சையான ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். தற்போது இதற்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடு இருக்க வேண்டும் எனவும், ஆனால் அவர் கடினமான கிரிக்கெட்டை விட்டு விட்டு எளிமையான ஒருநாள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்ததாகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது சாதாரண எளிமையான விஷயம் என்றும் கூறியிருந்தார். தற்போது இது சர்ச்சையாக மாறி வருகிறது.
ஏன் மற்றவர்கள் செய்யவில்லை?
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது எளிமையான விஷயம் என்றால், ஏன் மற்றவர்களால் விராட் கோலி குவித்த அளவுக்கு ரன்கள் குவிக்க முடியவில்லை? உண்மை அதுவாக இருந்திருந்தால் மற்றவர்களும் ரன் குவித்து இருப்பார்கள். வீரர்கள் செய்வதை நாம் ரசிப்போம். அவர்கள் ரன் எடுக்கிறார்கள், விக்கெட் வீழ்த்துகிறார்கள் வெற்றி பெற வைக்கிறார்கள். அதை மட்டும் பார்ப்போம்”
“இதில் யார் எந்த வடிவத்தில் விளையாடுகிறார்கள் விளையாடவில்லை என்பது முக்கியம் கிடையாது. விராட் கோலி தற்பொழுது ஒரு வடிவத்தில் விளையாடினாலும் கூட இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர்”
இப்போதும் அவரால் செய்ய முடியும்
“விராட் கோன்ற மூத்த வீரர்கள் இளம் தலைமுறைக்கு உத்வேகம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மஞ்ச்ரேக்கர் அவருடைய கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. நான் பார்க்கும் இடம் என்னவென்றால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”
இதையும் படிங்க : வைபவ் சூரியவன்சியை U19 உலகக் கோப்பையில் ஆட வைக்கக்கூடாது.. அதனால பெரிய பிரச்சனை வரும் – WV ராமன் கருத்து
“விராட் கோலி தற்போது ஒரே வடிவத்தில் விளையாடினால் கூட அடுத்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்தால் அவர்தான் எங்கள் அணியின் முக்கிய வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






