இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 91 பந்தில் 93 ரன்கள் குறித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இதற்குப் பிறகு அவர் போட்டி குறித்து பேசி உள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 91 பந்தில் 93 ரன்கள் எடுக்க, இந்திய அணி ஆறு விக்கெட் இழந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என் அம்மாவுக்கு அனுப்பி விடுவேன்
இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது ” நான் எத்தனை ஆட்ட நாயகன் விருது வாங்கி இருக்கிறேன் என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் ஆட்டநாயகன் விருது வாங்கினால் என் அம்மாவுக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். என்னுடைய முழு பயணத்தையும் திரும்பி பார்த்தால் கனவு நனவான மாதிரி தான் இருக்கிறது. நான் இதற்கு மிக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடவுள் எனக்கு அளவுக்கு மீறி கொடுத்திருக்கிறார். அதற்கு நான் நன்றியோடு இருக்கிறேன்”
“உண்மையைச் சொன்னால் நான் இப்போது விளையாடும் முறையில் தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிப்பதே கிடையாது. நாங்கள் இன்றைய போட்டியில் முதலில் விளையாடி இருந்தால் இதைவிட அதிரடியாக விளையாடியிருப்பேன். அணியை முன்னுக்கு கொண்டு சென்று வெற்றி பெற வைப்பதுதான் முக்கியமானது”
தோனிக்கும் இது நடந்தது
“நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருகிறேன். எனவே கொஞ்சம் கொஞ்சம் கடினமாக இருந்தால் எதிர் தாக்குதல் நடத்தி நான் நிலைமையை சரி செய்ய பார்ப்பேன். இன்றைக்கு முதல் 20 பந்துகளில் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது”
இதையும் படிங்க : 20வது முறை.. திடீர் பரபரப்பு.. ஹர்ஷித் ஆனா கேமியோ.. விராட் சதம் மிஸ்.. கேஎல் ராகுல் ஃபினிஷிங்கில் வென்றது இந்திய அணி
“எனக்கு முன்பாக பேட்டிங் செய்யக்கூடிய வீரர் அவுட் ஆகும் பொழுது, நான் உள்ளே வருவதற்காக ரசிகர்கள் கத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இதேபோல தோனிக்கு நடந்திருக்கிறது. ரசிகர்கள் உற்சாகப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் நான் என்னுடைய விஷயத்தில் கவனமாக இருப்பேன். மக்கள் வந்து என்னை பார்ப்பதே ஒரு ஆசீர்வாதம்தான். அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். சந்தோசமான முகங்களை பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோசமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






