இன்று விஜய் ஹசாரே காபியில் பஞ்சாப் மும்பை அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ஆச்சரியமான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியின் சர்பராஸ் கான் அதிவேக அரை சதத்தை அடித்திருக்கிறார்.
இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக நட்சத்திர வீரர்கள் அபிஷேக் சர்மா விளையாடினார். மும்பை அணியின் தரப்பில் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், சிவம் துபே ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள்.
விசித்திரமான போட்டி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரில் ரமன்தீப் சிங் 72 ரன்கள், அன்மோல்ப்ரீத் சிங் 57 ரன் எடுத்தார்கள். பஞ்சாப் அணி 216 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை அணிக்கு ரகுவன்சி 23, முசீர் கான் 21, ஸ்ரேயாஸ் ஐயர் 45, சூரியகுமார் யாதவ் 15, சிவம் துபே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வந்த சர்பராஸ் கான் வெறும் 15 பந்தில் அரைசதம் அடித்தார். மேலும் 20 பந்தில் 62 ரன்கள் குவித்தார். பேட்டிங் வரிசையில் முதல் நான்கு பேர் 150 ரன்கள் மேல் எடுத்தார்கள். ஆனால் இந்த போட்டியில் மும்பை 215 ரன் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் இந்த ரன்னை வெறும் 26 ஓவரில் எடுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்பராஸ் கான் ஐபிஎல் வாய்ப்பு
இந்த போட்டியில் சர்பராஸ் கான் 310 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 20 பந்தில் 62 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம். இத்துடன் அபிஷேக் ஷர்மாவின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உடன் 30 ரன்கள் நொறுக்கி தள்ளி இருக்கிறார்.
இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு வரப் போகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. திடீர் மாற்றங்கள்.. என்ன நடக்கிறது?
இந்திய உள்நாட்டு வெள்ளைப் பந்து தொடர்களில் சர்ப்ராஸ் கான் ஆட்டம் மிக அபாரமாக இருந்து வருகிறது. மேலும் சுழல் பந்துவீச்சை மிகச் சிறப்பாக கையாண்டு விளையாடுவதற்கு ஸ்வீப் ஷாட் வைத்திருக்கிறார். எனவே சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவதற்கு இவர் முக்கியமான பேட்ஸ்மேனாக இருப்பார். அதனால் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் எடுத்ததும் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது.






