டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு வரப் போகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. திடீர் மாற்றங்கள்.. என்ன நடக்கிறது?

0
279
Shreyas

தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அடியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவதற்கான திடீர் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இது நூறு சதவீதம் நடக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 11 ஆம் தேதி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி ஆரம்பமாகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்குப் பின்னடைவு

இதைத்தொடர்ந்து இந்தியா நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றன. அதைத்தொடர்ந்து பிப்ரவரி பதினொன்றாம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா திடீரென வயிற்றுப் பகுதியில் காயமடைந்திருக்கிறார். தற்போது அவர் இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறார். எனவே அவர் 100% நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட போவதில்லை என்று தெரிகிறது. அதே சமயத்தில் காயம் குணமடைய நான்கு வாரங்கள் ஆகலாம். அந்த நேரத்தில் டி20 உலகக் கோப்பை தொடங்கும்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கான வாய்ப்பு

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் மூன்றாவது இடத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருக்கும் இஷான் கிஷானை விளையாட வைக்க கம்பீர் விரும்புவார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐக்கு அனுப்பிய முக்கிய செய்தி.. அணியில் இடம் பொறுப்பு உறுதியானது.. ரசிகர்கள் மகிழ்ச்சி

அதேசமயத்தில் திலக் வர்மா நான்கு வார ஓய்விற்கு பிறகு முழுமையாக குணமடையாவிட்டால் அது இந்திய அணியின் திட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அவர் காயம் குணமடைவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் நிச்சயமாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியில் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது என்பது உறுதி.

- Advertisement -