இந்திய முன்னாள் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் அர்ஜுன் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் போல சிறந்த பேட்ஸ்மேனாக வர முடியும் எனக் கூறியிருக்கிறார்.
இவரிடம் ஒருமுறை அர்ஜுன் டெண்டுல்கர் சில வாரங்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அதற்குப் பிறகு மீண்டும் அவர் வெளியேறி வந்துவிட்டார். இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி யோகராஜ் சிங் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தடுமாற்றம்
சச்சின் டெண்டுல்கர் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணிக்காக விளையாட வைக்காமல் கோவா அணிக்காக விளையாட அனுப்பி வைத்தார். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து அவரை அடிப்படை விலைக்கு வாங்கி அணியில் வைத்திருந்தது. ஆனால் சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரை ஒரு பவுலராகவே பார்த்தார்கள்.
அதே சமயத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய முதல் ரஞ்சி அறிமுகத்தில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அடங்கியிடமிருந்து அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணி ட்ரேடிங் முறையில் வாங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நான் அவர்களிடம் கேட்டேன்
இது குறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது ” என்னிடம் ஒரு முறை அர்ஜுன் டெண்டுல்கர் 12 நாட்களுக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவர் மீது பந்து தாக்கி விட்டது. இதன் காரணமாக அவர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நான் அவரை பந்து வீச வேண்டாம் என சொல்லிவிட்டு பேட்டிங் பயிற்சி செய்யலாம் என்று சொன்னேன். அதுவரையில் அவர் பேட்டிங் செய்து நான் பார்த்ததில்லை”
இதையும் படிங்க: ஆசஸ் டெஸ்ட் தொடர்.. திடீரென ஓய்வை அறிவித்த ஆஸி வீரர்.. காலியாகும் கூடாரம்.. முழு தகவல்கள்
“அவர் பேட்டிங் பயிற்சியில் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் பவுண்டரி அடித்து சிறப்பாக விளையாடினார். அவர் விளையாடுவதை பார்க்க சிறப்பாக இருந்தது. அவருடைய பயிற்சியாளர் இடம் ஏன் இவரை பேட்டிங் பயிற்சி கொடுப்பதில்லை என்று கேட்டேன். அவர்கள் இவரை பவுலராக பார்ப்பதாக கூறினார்கள். ஆனால் அர்ஜுன் டெண்டுல்கர் அவருடைய தந்தை சச்சின் டெண்டுல்கர் போல சிறந்த பேட்டிங் திறமை கொண்டவராக இருக்கிறார். இதை கூர்த்தீட்டி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






