இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்தர் குக், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது இங்கிலாந்து அணி வீழ்த்தியிருக்க வேண்டும் என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை டிரா செய்தது. இந்திய அணியின் சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற போதிலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி ஆசஸ் தொடரை இழந்திருக்கும் நிலையில் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், பலம் இல்லாத இந்திய அணியை இங்கிலாந்து அணி ஜெயிக்காத போதே அதன் தரம் என்னவென்று தெரிகிறது என்று சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்த இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிக்கும், உள்ளூர் இங்கிலாந்து கவுண்டி அணிக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வீழ்த்தினால் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குள் நுழைவதற்கு ஒரு பாதை இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:இந்தியா மீது வைக்கும் விமர்சனத்தை.. ஆஸி மீதும் வைக்கணும்.. நியாயம்தான் முக்கியம் – பீட்டர்சன் வலியுறுத்தல்
எனவே இங்கிலாந்து அணி இந்த வேலையை நிச்சயமாக செய்ய வேண்டும். எனக்கு ராப் கீ பிடிக்கும் மெக்கெல்லம் பிடிக்கும். அவர்கள் செய்கிற வேலை பிடிக்கும். ஆனால் ஒரு பெரிய தொடருக்காக தயாராகும் விதத்தில் சில சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவைப் பற்றி பேசுறோம் . இங்கிலாந்து அணி இங்க அவங்கள டிரா பண்ணாங்க. ஆனா சொந்த மண்ணில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது. அதனால இந்திய அணியும் தற்போது நல்ல அணி கிடையாது. இந்த யதார்த்தம் இப்போ இங்கிலாந்து டெஸ்ட் அணியை தாக்கிவிட்டது” என்று பேசி இருக்கிறார்.






