தற்போது நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது.
இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா அணி வென்று இருந்தது. இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் என்கின்ற முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அலெக்ஸ் கேரி சதம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 106 ரன்கள் எடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட சென்று விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு கேப்டன் ஸ்டோக்ஸ் 83 ரன்கள் எடுத்தார். போலன்ட் மற்றும் கம்மின்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
டிராவிஸ் ஹெட் சதம்
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 349 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 170 ரன்கள் குவித்தார். ஜோஸ் டங் 4 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இசான் கிஷனுக்கு கிரிக்கெட் தந்த பரிசு இது.. தேர்வுக்குழு சொல்லும் செய்தியும் இது தான்.. அஸ்வின்
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்த முறை போராடி 352 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜாக் கிரவுலி 85, ஜெமி ஸ்மித் 60, வில் ஜேக்ஸ் 47 ரன்கள் கடைசியில் எடுத்து போட்டியை பரபரப்பாக்கினார்கள். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையிலேயே ஆஸ்திரேலியா தொடரை வென்று விட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை உலகெங்கும் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.






