சிஎஸ்கே ஏலத்தில் ஒரு பெரிய தப்பை செய்து விட்டது.. இந்த மூணு பேரும் ஆடியே ஆகணும் – ஸ்ரீகாந்த் கருத்து

0
159
Srikanth

நேற்று ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வீரரை வாங்காமல் தவறு செய்து விட்டதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு இறுதி கட்ட ஓவர்களை வீசுவதற்கு நாதன் எல்லீஸ் இருக்கிறார். ஆனால் இவருடன் இணைந்து வீசுவதற்கு இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இந்த விஷயத்தில் சிஎஸ்கே தவறு செய்து விட்டதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவரை வாங்கி இருக்க வேண்டும்

இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “சிஎஸ்கே முஸ்தஃபிஸூர் ரஹமானை ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டது. நீங்கள் பதிரனாவை வெளியே விட முடிவு செய்ததுமே இறுதி கட்ட ஓவர்களை வீசுவதற்கு உங்களுக்கு ஒரு பவுலர் தேவை. எனவே நீங்கள் அதற்கு இவரை வாங்கி இருக்க வேண்டும். தற்போது அவர்களிடம் ஒரு டெத் பவுலர் இல்லை”

“கார்த்திக் சர்மா மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக எடுக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் வீர் இருவரும் ஒரே பிளேயிங் லெவனில் விளையாட முடியாது. அகேல் உசைன் விளையாட வேண்டும். என்று நான் விரும்புகிறேன் அவர் ஒரு சிறந்த பவுலர். நீங்கள் நூர் அகமதுவை மட்டுமே நம்பி இருக்க முடியாது. உங்களுக்கு இவரும் தேவை. பிரசாந்த் நமக்கு எப்படி யூஸ்வார் என்பது தெரியாது”

- Advertisement -

இந்த மூவரையும் ஆடலும்

” சிஎஸ்கே இளைஞர்களை நோக்கி செல்கிறார்கள் என்று நமக்கு மிகத் தெளிவாக தெரியும். அவர்கள் தற்போது ராகுல் சகரை வாங்கி இருக்கிறார்கள். அவர் கொஞ்சம் கோபப்படக்கூடிய வீரர் என்று சொல்லப்படுகிறது. எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை அவர் திறமையானவர். சேப்பாக்கம் கண்டிஷனில் அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் அணியை வெல்ல வைத்திருக்கிறார்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2026 ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்.. இர்பான் பதான் கணிப்பு

” எனக்கு நூறு அகமது, அகேல் உசைன் மற்றும் ராகுல் சேகர் மூவரும் ஒரே பிளேயிங் இருந்தாலும் பிரச்சனை கிடையாது. இப்படி ஒரு அணி இருந்தால் நான் 11 வது இடத்தில் அன்சூல் காம்போஜை வைக்க மாட்டேன். நான் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்திற்கு சிவம் துபேவை வைத்துக் கொண்டு விளையாடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -