கில் துணை கேப்டனாக இருந்தாலும் நீக்கலாம்.. வரலாற்று சாதனை வீரருக்கு வாய்ப்பு கொடுங்க – முகமது கைப்

0
7
Gill

இந்திய கிரிக்கெட்டில் துணை கேப்டன்களை நீக்கிய வரலாறு இருக்கிறது எனவே கில்லை நீக்கலாம் என முகமது கைஃப் கூறியிருக்கிறார். நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை பெற்று தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் கில்லை தாராளமாக அணியில் இருந்து நீக்கலாம் என முகமது கைஃப் அதிரடியாக தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படியான சம்பவம் ஏற்கனவே நடைபெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

துணை கேப்டனை நீக்கலாம்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது “கில் எப்படி அவுட் ஆகிறார் என்று பார்த்தால், அவர் ஸ்லிப்பில் அவுட் ஆகிறார், மேலும் இறங்கி வந்து விளையாட முயற்சி செய்து அவுட் ஆகிறார், அபிஷேக் ஷர்மா போல அதிரடியாக விளையாட முயற்சி செய்து அவுட் ஆகிறார். இப்படி அவர் எல்லாவற்றையும் முயற்சி செய்து விட்டார். எனவே அவருக்கு ஒரு பிரேக் கொடுத்து ஏற்கனவே நிரூபித்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என நினைக்கிறேன்”

“சஞ்சு சாம்சன் ஒரு உயர்தர வீரர். அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். வாய்ப்பு வழங்குவதில் இரட்டை தரநிலைகள் இருக்கக் கூடாது. துணை கேப்டன்கள் இதற்கு முன்பாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். கில்லுக்கு ஓய்வு கொடுத்து வேறு யாரையாவது கொண்டு வருவது அணியின் நலனை அதிகப்படுத்தும் என்றால் அதை தாராளமாக செய்யலாம்”

- Advertisement -

வரலாற்று சாதனை செய்தவர்

“தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை நீங்கள் நீக்கினீர்கள். சஞ்சு ஒரு தொடக்க வீரராக நிறைய ரன்கள் எடுத்த போதும் கூட நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரையும் நீக்கினீர்கள். அவர் 5 டி20 போட்டிகளில் 3 சதங்களை அடித்திருந்தார். இது வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையாக இருந்தது”

இதையும் படிங்க : நீங்க கில் மட்டுமல்ல அபிஷேக்கையும் நீக்கலாம்.. ஐபிஎல்-க்கு 3 வாரம் இருந்தாலும் கவலை இல்லை – ஆசிஷ் நெக்ரா பேட்டி

“நீங்கள் சில வீரர்களுக்கு குறைவான வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கிறீர்கள். சில வீரர்களுக்கு யாருக்கும் கிடைக்காத அளவுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள். நீங்கள் அந்த வீரரை அணியில் நிலைநிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் இப்போது அழுத்தம் அதிகரித்து விட்டது. இது மாற்றத்திற்கான நேரம். எனவே வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -