நீங்க கில் மட்டுமல்ல அபிஷேக்கையும் நீக்கலாம்.. ஐபிஎல்-க்கு 3 வாரம் இருந்தாலும் கவலை இல்லை – ஆசிஷ் நெக்ரா பேட்டி

0
5
Gill

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய வீரருமான ஆசிஷ் நெக்ரா, தனது ஐபிஎல் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்பன் கில் இருந்து வருகிறார். அவருக்கு இந்த வடிவத்தில் பத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட இம்பாக்ட் கொடுக்கவில்லை.

- Advertisement -

காத்திருக்கும் வீரர்கள் பட்டியல்?

இந்த நிலையில் இந்திய டி20 அணியில் தொடக்க இடத்திற்கு ஜெய்ஸ்வால், ருதுராஜ், சஞ்சு சாம்சன், இசான் கிஷான் என ஒரு பெரிய படையே காத்திருக்கிறது. மேலும் அடுத்த சில வருடங்களில் தற்போது 14 வயதாகி இருக்கும் வைபவ் சூரியவன்சியும் போட்டியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அதிரடியான வீரர்கள் வெளியில் இருக்கும் பொழுது தொடர்ந்து சொதப்பி வரும் கில்லை நீக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் பெரிய அளவில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்யும்பொழுது மிகவும் எளிதாக விக்கெட்டை விட்டு விடுகிறார் என்பது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

- Advertisement -

யாரை வேண்டுமானாலும் நீக்கலாம்

இதுகுறித்து ஆசிஷ் நெக்ரா கூறும்பொழுது ” நீங்கள் சுப்மன் கில் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவர் இப்படி விளையாடும் நேரத்தில் ஐபிஎல் தொடருக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் பேசிக் கொண்டிருப்பது டி20 ஃபார்மேட். இப்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு இருக்கிறது. ஆனால் நாம் விமர்சனங்களை ஆரம்பித்து விட்டோம். இதுதான் நம்முடைய பெரிய தவறு. சர்வதேச கிரிக்கெட் இல்லை ஐபிஎல் எதுவாக இருந்தாலும் கில் மாதிரியான ஒரு வீரரை மூன்று போட்டிகளில் மதிப்பிட ஆரம்பித்தால், அது நன்றாக இருக்காது”

இதையும் படிங்க : தெஆ 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. மும்முனை திட்டத்துக்கு திரும்பும் கம்பீர்.. பழைய வியூகம் வருமா?

“நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு பல விருப்பங்கள் இருக்கலாம். கில் மற்றும் அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு, சாய் சுதர்சன் மற்றும் ருதுராஜை கொண்டு வரலாம். இவர்களையும் விட்டு விட்டு வாஷிங்டன் சுந்தர் இசான் கிசானை கூட விளையாட வைக்கலாம். வீரர்கள் சரியாக விளையாடாத போது மாற்றுவது என்று பேசினால், நிறைய விருப்பங்கள் இருக்கிறது. ஆனால் அது சரியானது இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -