இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்னை நானே நம்பாவிட்டால் மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்து 28 பந்துகளில் அதிரடியாக 58 ரன்கள் குவித்தார். மேலும் பந்துவீச்சில் டேவிட் மில்லர் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ஹர்திக் பாண்டியா முக்கியத்துவம்
தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அவர் இருந்தால் மட்டுமே பேட்டிங் வரிசையை 8 வரையில் கம்பீரால் அமைக்க முடிகிறது. அவர் இல்லாவிட்டால் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணாவை விளையாட வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா இந்திய பிளேயிங் லெவனில் இருந்தால் ஒரே நேரத்தில் பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் இரண்டும் பலமடைகிறது. தற்போது இந்திய அணியில் எல்லா வீரர்களுக்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இன்னும் மாற்று வீரர் வரவில்லை என்பதுதான் அவருடைய முக்கியத்துவத்திற்கான சான்று.
எலுமிச்சை பழங்களை எறியுங்கள்
தன் குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “நீங்கள் ஒரு ராக் ஸ்டார் போல இருக்க வேண்டும். நீங்கள் வந்து பத்து நிமிடம் பர்பாமன்ஸ் பண்ணும்போது, உங்களைப் பார்த்து கூட்டம் கத்த வேண்டும். இதுதான் எனக்கு பெரிய உந்து சக்தி. என்மீது வாழ்க்கை நிறைய எலுமிச்சை பழங்களை திறந்து இருக்கிறது. ஆனால் நான் அதை வைத்து லெமனேடு செய்யத்தான் முயற்சி செய்திருக்கிறேன். என்னை நானே நம்பாவிட்டால் பிறகு யார் நம்ப போகிறார்கள்? இன்னும் பலமாகவும் பெரியதாகவும் சிறப்பாகவும் திரும்பி வரவேண்டும். இதுதான் என்னுடைய எண்ணம்”
இதையும் படிங்க: கில் நீங்க சஞ்சுவோ அபிஷேக்கோ கிடையாது.. இத செஞ்சா மட்டும் தான் ரன் வரும் – இர்பான் பதான் அறிவுரை
“நான் உள்ளே நுழையும் பொழுது இந்த தருணத்திற்காகவே மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் என் பேட்டிங்கை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் பலமாக இருக்கும் பொழுது நான் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன். எனக்கு அது நிறைய தன்னம்பிக்கையையும், என் திறமைகளை நான் நம்பவும் உதவியது. நான் என்னை உண்மையிலேயே மிகவும் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






