தற்போது இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் ரன்கள் எடுக்க தடுமாறி வருகிறார். டி20 உலக கோப்பை அருகில் இருக்கின்ற காரணத்தினால் ரன்கள் எடுக்க அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இர்பான் பதான் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்ட பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. நேற்று தான் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாவது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்.
கில்லுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் அணுகுமுறை அச்சமற்றதாக இருக்கிறது. பேட்டிங் யூனிட்டில் இருக்கும் எல்லோருமே அதிரடியாக விளையாட முயற்சி செய்ய வேண்டும். யாராவது இரண்டு மூன்று பேருக்கு சரியான நாளாக அமைந்தால் இந்திய அணி போட்டியை வென்று விடும். இந்த கலாச்சாரம் தற்போது அணிக்குள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயத்தில் சுப்மன் கில் பந்தை டைமிங் செய்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். மேலும் நிலைத்தன்மையுடன் ரன்கள் எடுத்து நீண்ட நேரம் களத்தில் இருக்கக்கூடியவர். இவரால் எல்லா பந்தையும் அடித்து விளையாடும் அணுகுமுறையில் விளையாட முடியாது. தற்போது தன் இயல்பில் விளையாடுவதால் அல்லது அணியின் கலாச்சாரத்திற்கு விளையாடுவதா? என்பதில் அவருக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
இதை செய்தால் போதும்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும்பொழுது “சுப்மன் கில் அபிஷேக் ஷர்மாவோ அல்லது வெளியில் இருக்கும் சாம்சனோ கிடையாது. அவர் தன்னுடைய இயல்பில் பேட்டிங் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தன்னுடன் விளையாடுபவர் மாதிரியோ அல்லது தான் யாருக்கு பதில் விளையாடுகிறோமோ அவர் மாதிரியும் விளையாட முயற்சி செய்யக் கூடவே கூடாது”
இதையும் படிங்க :
” தற்போது கில்லுக்கு ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதுவும் அதிரடியாக விளையாட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஏனென்றால் சாம்சன் அதிரடியாக விளையாடக் கூடியவராக இருந்தார். எனவே அந்த இடத்தை அப்படியே நிரப்ப அவர் நினைக்கிறார். ஆனால் அவர் பந்தை டைமிங் செய்து நிலைத்து விளையாட கூடியவர். எனவே அவர் இதையே தொடர்ந்து செய்ய வேண்டும். இப்பொழுது கில்லை மாற்றுவது சஞ்சு சாம்சனுக்கும் அழுத்தத்தையே ஏற்படுத்தும். எனவேகில் தன்னுடைய பேட்டி அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






