இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன் வித்தியாசத்தில். இந்த போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி முக்கியமான சில விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 332 ரன்கள் எடுத்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நான் தயாராவது இப்படித்தான்
இன்றைய போட்டி குறித்து பேசிய விராட் கோலி கூறும் பொழுது “இந்த போட்டிக்குள் நுழைந்து நான் விளையாடிய விதம் நன்றாக இருந்தது. முதல் 20, 25 ஓவர்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்தது. பிறகு ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தது. நான் என்னுடைய ஆட்டத்தை ரசித்து விளையாடுவதை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாக மட்டுமே இருந்தது. ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும் பொழுது, அதை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்? என்று உங்களுக்கு அனுபவத்தில் தெரியும்”
“நான் ஒருபோதும் அதிகப்படியான பயிற்சிதான் எல்லாவற்றையும் செய்யும் என்று நம்பக் கூடியவன் கிடையாது. என்னுடைய பெரும்பாலான தயாரிப்புகள் மனரீதியாகத்தான் இருக்கும். என் உடல் தகுதி நன்றாக இருக்கிறது. என் மனத் தெளிவும் நன்றாக இருக்கிறது. இது எனக்கு போதுமானது. நான் 37 வயதானவன் எனக்கு ரெக்கவரி நேரம் தேவை”
விளையாட இது இருந்தால் போதும்
” நான் தற்போது ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறேன். நீங்கள் 300 போட்டிகளில் விளையாடி இருந்தால், பயிற்சியில் பந்தை அடிக்கும் போது ரிப்லெக்ஷன் மற்றும் நீண்ட நேரம் நின்று விளையாட முடிவதற்கு உடல் தகுதி இருக்கிறத? என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும்”
இதையும் படிங்க : 349 ரன்.. வலிக்கு மருந்து போட்ட ரோ-கோ ஜோடி.. கடைசிவரை மிரட்டிய தென் ஆப்பிரிக்க அணி.. இந்தியா இறுதியில் வெற்றி
“நீங்கள் பந்தை நன்றாக அடித்து நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என்றால், உங்களுடைய உடல் மற்றும் மனம் சிறப்பாக இருக்கிறது என்றால், உங்களுக்கு விளையாட ஆர்வமும் இருக்கிறது என்றால் நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்” என்று கூறி இருக்கிறார்.






