30 ரன் 9 விக்கெட்.. படுமோசமாய் சுருண்ட இலங்கை.. சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி – முத்தரப்பு டி20 தொடர்

0
76
Pakistan

பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாகிஸ்தான், இலங்கை, மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடிய தொடரின் இறுதிப்போட்டி முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

30 ரன் 9 விக்கெட்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி நட்சத்திர வீரர் பதும் நிஷாங்கா 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இலங்கை அணி தொடர்ந்து விளையாடி 84 ரன்னுக்கு ஒரு விக்கெட் என்று வலிமையான நிலையில் இருந்தது. ஆனால் அங்கிருந்து அப்படியே சரிந்து அடுத்த 30 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 114 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணிக்கு அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஸ்ரா 47 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சாம்பியன்

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபர்கான் 22 பந்துகளில் 23 ரன், சைம் அயூப் 33 பந்துகளில் 36 ரன், கேப்டன் சல்மான் அலி ஆகா 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு எந்த நிலையிலும் ரன் அழுத்தம் ஏற்படவில்லை.

இதையும் படிங்க : விராட் ரோகித் வாழும் ஜாம்பவான்கள்.. அவங்களுக்கு எதிராக நிச்சயம் இதை செய்வோம் – டெம்பா பவுமா பேட்டி

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய பாபர் அசாம் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் அனைத்து நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -