இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இன்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்கள் உருவாகி இருக்கிறது.
ஆதிக்கம் செலுத்தும் இரண்டு அணிகள்
இந்த புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியையும், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியையும் தொடர்ந்து வென்று, நூறு வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
மேலும் தென்னாப்பிரிக்க அணி தான் விளையாடி உள்ள நான்கு டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி ஒன்றில் தோல்வியுடன் 75 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு ட்ராவுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சரிந்த இந்திய அணி
இந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிராக தோல்வி அடைந்து, 9 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி, நான்கில் தோல்வி, ஒன்றில் ட்ரா என மொத்தம் 48.15 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இதில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 50 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இந்திய அணிக்கு மேலாக தொடர்கிறது. முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி கீழே சரிந்து இருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியாவுல இது தினமும் கிடைக்காது.. என் பிளேயர்ஸ் நோக்கம் இது ஒன்னுதான்.. மாஸ் பண்ணிட்டாங்க – டெம்பா பவுமா மகிழ்ச்சி
ஆஸ்திரேலியா – 100
தென் ஆப்பிரிக்கா – 75
இலங்கை – 66.67
பாகிஸ்தான் – 50.00
இந்தியா – 48.15
இங்கிலாந்து – 36.11
பங்களாதேஷ் – 16.67
வெஸ்ட் இண்டீஸ் – 0.00
நியூசிலாந்து இன்னும் டெஸ்ட் போட்டி விளையாடவில்லை.






