இந்திய அணி குறித்து தென் ஆப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடு கிடையாது என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.
இந்திய அணியை தாங்கள் மண்டியிட வைக்க விரும்பினோம் என தென் ஆப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் நேற்றைய போட்டி நாள் முடிவில் பேசியிருந்தார். இந்த வார்த்தைக்கு பின்பாக மோசமான வரலாறு ஒன்று இருப்பதால் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து கேப்டன் பேச்சு
1976 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக் வெஸ்ட் இண்டீஸ் அணியை மண்டி இட வைப்போம், அவர்களை ஊர்ந்து போக செய்வோம் என்பதாக பேசியிருந்தார்.
அப்போது இனம், நிறம் சம்பந்தமாக நிறைய பிரச்சனைகள் வெளியில் சென்று கொண்டிருந்த காரணத்தினால், அவருடைய கருத்து மிக மோசமானதாக பார்க்கப்பட்டது. தற்போது அதே வார்த்தையை பயன்படுத்தி தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பேசி இருப்பது பலரையும் சங்கட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நான் உடன்படவில்லை
இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும் பொழுது ” நான் அவர் சொன்ன கருத்துடன் உடன்படவில்லை. அப்படி ஒன்றைப் பேசி இருக்கக் கூடாது. என்னடா அது குறித்து திரும்ப பேசவே விரும்பவில்லை. சில விஷயங்கள் இருக்கிறது, அவற்றை நீங்கள் திரும்ப சொல்லக்கூடாது. அது ஒரு கறை போல ஒட்டிக்கொண்டு இருக்கும். இது ஒரு தேவையில்லாத வேலை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணி வலிமையான நிலையில்தான் இருந்தது. எனவே எதுவும் பேசாமலே இருந்திருக்கலாம்”
இதையும் படிங்க : இந்திய அணியை மண்டி போட வைப்போம்.. இப்படியா பேசுவீங்க.. ரொம்ப மோசம் – அனில் கும்ப்ளே கண்டனம்
“தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சொல்ல விதத்தை நான் புரிந்து கொள்கிறேன். அது டோனி கிரேக் சொன்னது போல கடுமையானது கிடையாது. இருந்தாலும் நீங்கள் அப்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. மன்னிக்கவும் சுக்ரி நீங்கள் பேசிய வார்த்தை தேவையே இல்லாதது” என்று கூறியிருக்கிறார்.






