ஸ்பின்னை சமாளிக்க.. இந்திய வீரர்களுக்கு வித்தியாசமான பயிற்சி.. கம்பீர் செய்த புதிய ஏற்பாடு – சுவாரசிய தகவல்

0
43
Gambhir

இந்திய அணி வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதற்கு வித்தியாசமான முறையில் அதே நேரத்தில் ஆபத்தான பயிற்சி முறையை மேற்கொண்டு வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை எடுத்து வெற்றி பெற முடியாமல் சுழல் பந்துவீச்சில் தடுமாறி இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சுழல் பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் கொடுத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

வழக்கமான பயிற்சி முறை

பொதுவாக எல்லா அணிகளும் எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கிய பயிற்சி முறையை மேற்கொள்ளும். இதன் காரணமாக வீரர்கள் காயம் அடையாமல் இருப்பதை உறுதி செய்யும். பயிற்சியில் வீரர்கள் காயம் அடைந்து வெளியேறுவது கிரிக்கெட்டில் மோசமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மிகக் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியின் போது வீரர்கள் காயமடையாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. முக்கிய வீரர் ஒருவர் விலகினால் கூட அது ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே டெஸ்ட் பயிற்சிக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்.

- Advertisement -

ஆபத்தான பயிற்சி முறை

இந்த நிலையில் தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறும் போது முன் காலில் பேடை கட்டாமல் பயிற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறது. சாய் சுதர்சன் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் காயம் அடைவதற்கான அதிக வாய்ப்புள்ள இந்த பயிற்சியை மேற்கொண்டு பயிற்சியை செய்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்தியா செய்த அதை உங்களுக்கு செய்வோம்.. இங்கிலாந்து அணி எச்சரிக்கும் ஆஸி மீடியாக்கள் – வெளியான தகவல்கள்

சுழல் பந்து வீச்சில் முன் காலில் பந்தை வாங்கி எல்பி டபிள்யு ஆகாமல் இருக்க, முன் காலில் பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி பெறும் பொழுது, எல்லா பந்தையும் பேட்ஸ்மேன்கள் பேட்டில் தடுத்து விளையாட முயற்சி செய்வார்கள். இது பந்தை கட்டாயம் பேட்டில் தடுப்பதற்கான பழக்கமாக மாறும். எனவே சுழல் பந்துவீச்சில் விக்கெட் இழக்காமல் இருப்பதற்கு இத்தகைய ஆபத்தான பயிற்சி முறையை இந்திய வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -