இந்தியா செய்த அதை உங்களுக்கு செய்வோம்.. இங்கிலாந்து அணி எச்சரிக்கும் ஆஸி மீடியாக்கள் – வெளியான தகவல்கள்

0
27
Stokes

ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடர் வருகின்ற 21ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இங்கிலாந்து அணி மீதான தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றன.

இந்த முறை ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலையில் முடிந்தது. ஆனாலும் அதற்கு முன்பு ஆசஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி இருந்த காரணத்தினால், தற்போதும் கோப்பை அவர்களது கைவசமே இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் இங்கிலாந்து செய்த காரியம்

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக வெள்ளை பந்து தொடர்களில் விளையாட வந்திருந்த இங்கிலாந்து அணி பயிற்சியை கைவிட்டு கோல்ப் விளையாடச் சென்றார்கள். இது அந்த நேரத்தில் பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது. இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்திய அணி இரண்டு வெள்ளை பந்து தொடர்களிலும் இங்கிலாந்து அணியை படுதோல்வி அடைய வைத்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் செய்ததைப் போல பயிற்சிகள் ஈடுபடாமல் கோல்ப் விளையாடச் சென்று விட்டார்கள். இது ஆஸ்திரேலியா மீடியாக்களை கடுமையாக கோபப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா மீடியாக்கள் கோபம்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் கோல்ப் விளையாடச் சென்ற இங்கிலாந்து அணி மீது தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி செய்திருக்கும் காரியத்திற்கு அவர்களுக்கு முதல் டெஸ்டில் சரியான பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இது உங்களுக்கு தேவையா பாஸ்? பாபர் அசாம்க்கு ஐசிசி அபராதம்.. கோபத்தில் செய்த குற்றத்திற்காக தண்டனை..

இந்த நிலையில் போட்டிக்கு எப்படியான பயிற்சி மூலம் தயாராவது என்பது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசும் பொழுது ” தற்பொழுது கிரிக்கெட் நிறைய மாறி இருக்கிறது. ஒரு போட்டிக்கு தயாராகும் முறையும் மாறி இருக்கிறது. நாங்கள் தேவையான அளவுக்கு தயாராகி இருக்கிறோம் என்று நம்புகிறேன். நாங்கள் தயாரான முறையில் இருந்து முழுவதுமாக முதல் டெஸ்ட் போட்டியில் கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -