பாகிஸ்தானில் இருந்து வெளியேற துடிக்கும் இலங்கை அணி.. திட்டங்களில் அதிரடி மாற்றம்.. புதிய அறிவிப்புகள்

0
74
Naqvi

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மொஹ்சின் நக்வி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தலைநகரில் கோரமான தாக்குதல் நடைபெற்றது தொடர்ந்து, பாகிஸ்தானில் ஒரு நாள் தொடரில் விளையாடும் இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து தற்பொழுது பல அதிரடியாக விஷயங்கள் நடந்திருக்கின்றன.

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை அணி முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதற்கு உடன்பட மறுக்கும் இலங்கை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. எனவே இலங்கை வீரர்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் தங்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணியின் பேரு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல பெரிய நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டன. இந்த நிலையில் மீண்டும் 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவாதம்

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பாகிஸ்தானில் இருக்கும் இலங்கை அணிக்கு அந்த நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருக்கிறார். தொடர்ந்து இருந்து தொடரை முடித்துக் கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார். மேலும் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : வெறும் 15 ஓவர்.. வெஸ்ட் இண்டீஸை சம்பவம் செய்த நியூசி.. சிஎஸ்கேவுக்கு புது தலைவலி.. என்ன நடந்தது?

இதுகுறித்து பதிவு செய்துள்ள மொஹ்சின் நக்வி “பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை தொடர முடிவு செய்த இலங்கை அணிக்கு நன்றி. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான ஒரு நாள் தொடரில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16ஆம் தேதிகளுக்கு மாற்றப்படுகிறது. இந்த போட்டிகள் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும். விளையாட்டுத் திறன் மற்றும் ஒற்றுமையின் பிரகாசமாக இது ஒளிர்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -