நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அபாரமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெற்று தொடரையும் வென்றது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
ஜேக்கப் டப்பி அபாரம்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஷாய் ஹோப் 11, அலிக் ஆதனஸ் 1 ரன்கள் என உடனடியாக வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த அக்கீம் அகஸ்டி 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரோஸ்டன் சேஸ் 32 பந்தில் 38 ரன்கள், ரோமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 36 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 19 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் ஆல் அவுட் ஆகி 144 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டப்பி 4 விக்கெட் கைப்பற்றினார்.
நியூசிலாந்து அபார வெற்றி
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் ராபின்சன் 25 பந்தில் 45 ரன்கள், கான்வே ஆட்டம் இழக்காமல் 42 பந்தில் 47 ரன், ரச்சின் ரவீந்தரா 16 பந்தில் 21 ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா இதை நிச்சயம் செய்ய மாட்டார்.. சிஎஸ்கேவுக்கே செய்ய அவருக்கு பிடிக்கல – முகமது கைஃப் பேட்டி
இந்த நிலையில் நியூசிலாந்து மண்ணில் நடந்து வரும் எல்லா வெள்ளைப்பந்து தொடர்களிலும் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக இவர்களை விடுவதா அல்லது இவர்களில் யாரையாவது தக்க வைப்பதா என்ற புது குழப்பம் சிஎஸ்கே அணிக்கு உருவாகி இருக்கிறது.






