நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சுப்மன் கில் மிகவும் மெதுவாக விளையாடுவதாக ரசிகர்கள் வைத்த விமர்சனத்திற்கு பார்த்திவ் படேல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த போட்டியில் சுப்மன் கில் ஒரு முனையில் நின்று நீண்ட நேரம் விளையாடி 39 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் வேகமாக விளையாடவில்லை என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்தார்கள். மேலும் ஒருநாள் போட்டி போல விளையாடுவதாக சிலர் கேலி செய்தார்கள்.
இது மும்பை கிடையாது
இது குறித்து பார்த்திவ் படேல் பேசும்பொழுது ” இந்த போட்டி மும்பை வான்கடே இல்லை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று இருந்தால் நீங்கள் ஸ்டிரைக் ரேட்டை பார்க்கலாம். ஏனென்றால் கில் கிட்டத்தட்ட 40 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்”
” ஆனால் நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் என்று விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. கில் நேற்று அவ்வாறு பேட்டிங் செய்யாமல் இருந்திருந்தால் 167 என்ற ஸ்கோர் 130 என்று இருந்திருக்கும். நாம் 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இது எந்த அளவிற்கு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது என்பதை காட்டுகிறது. நாம் ரன்னுக்கு 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஆடுகளம் எந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை என்பதை காட்டுகிறது”
கேலி செய்பவர்கள் யோசிக்கட்டும்
“சுப்மன் கில் ஆடுகளத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறந்த முறையில் கையாண்டார். இந்த வகையான ஆடுகளத்தில் எந்த முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார். அவர் தைரியமாக விளையாடதது போல் இல்லை. அவர் ஆரம்பத்தில் தைரியமாகவே விளையாடினார்”
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தியை பார்த்தாலே மேக்ஸ்வெல் நடுங்குகிறார்.. கேக் மாதிரி முழுங்கிவிடுகிறார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“இருந்த போதிலும் கூட முதல் ஆறு ஓவர்கள் தாண்டியதும் அவர் தனது இன்னிங்ஸை நீண்டதாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். எனவே அவரை ட்ரோல் செய்து கொண்டிருப்பவர்கள் இதை புரிந்து கொண்டால், நேற்று அவர் எப்படியான ஒரு ஆட்டத்தை ஆடினார் என மதிப்பிட முடியும்” என்று கூறியிருக்கிறார்.






