156 பந்து 222 ரன்.. பிரித்வி ஷாவுக்காக கேப்டன் ருதுராஜ் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்.. ரசிகர்கள் பாராட்டு

0
57
Prithvi

ரஞ்சி தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் இரட்டை சதம் அடித்த பிருத்வி ஷாவுக்காக செய்த காரியம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

இந்த ரஞ்சி சீசன் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜுக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் போட்டியில் சதம் அடித்த அவர் இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்து தனது அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

ருதுராஜ் அசத்தல்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 116 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் தட்டுத் தடுமாறி எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. ஒருவேளை ருதுராஜ் தனது அணிக்கு சதம் அடிக்காமல் இருந்திருந்தால், முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா அணியை தாண்டி சண்டிகர் அணி கூடுதல் ரன் எடுத்து, புள்ளிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கும்.

- Advertisement -

பிரித்வி ஷா சாதனை இரட்டை சதம்

இதைத் தொடர்ந்து விளையாடிய மகாராஷ்டிரா அணிக்கு புதிதாக இணைந்துள்ள தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அபாரமாக விளையாடி 156 பந்துகளில் 222 ரன்கள் குவித்தார். ரஞ்சி தொடரில் மிக வேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதமாக பதிவாகியது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா அணி போட்டியையும் வென்றது.

இதையும் படிங்க : 194 ரன்.. டி20க்கு திரும்ப வந்த பாபர் அசாம் செய்த காரியம்.. பாகிஸ்தான் பரிதாபம்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்தப் போட்டியில் ருதுராஜுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இருந்த போதும் இரண்டாவது இன்னிங்ஸில் சாதனை இரட்டை சதம் அடித்த பிரித்வி ஷாவை அழைத்து அந்த விருதை ருதுராஜ் சேர்ந்து பகிர்ந்து கொண்டார். ஒரு கேப்டனாக இருந்து ஏற்கனவே பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் பிரித்வி ஷாவுக்கு ருதுராஜ் செய்த காரியம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -