ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்பது குறித்து மைக்கேல் கிளார்க் கணிப்பு தெரிவித்து இருக்கிறார்.
நாளை கான்பரா மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இப்போது இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியன் ஆக இருப்பதால் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
இந்திய அணிக்கு சிக்கல்
தற்போது ஆஸ்திரேலியா சூழ்நிலையில் விளையாடுவதால் இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது கடினமானதாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாதது மேலும் பின்னடைவை உருவாக்குகிறது.
ஹர்திக் பாண்டியா இல்லாதது ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட்டில் காம்பினேஷன் அமைப்பதில் பெரிய பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. இதைத் தாண்டி தொடரை இந்திய அணி எப்படி வெல்லும்? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இவர்தான் அதிக ரன் எடுப்பார்
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்ற கேள்விக்கு, மார்ஸ் ஹெட் போன்ற அதிரடி வீரர்கள் ஆஸ்திரேலியா பக்கம் இருந்தாலும் கூட, மைக்கேல் கிளார்க் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இப்ப எங்களுக்கு பெரிய சவால் இந்த இந்திய வீரர் தான்.. மொத்த டீமுக்குமே டோன் செட் பண்ணுவாரு – மிட்சல் மார்ஸ் பேட்டி
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாட தயாராகிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் 11 வீரர்களை மட்டுமே ஒரு அணிக்கு தேர்வு செய்ய முடியும் எனும் பொழுது இவர் போன்ற ஒருவர் விளையாடுவது கடினம் ஆகிவிடுகிறது. இவர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் சூப்பர் ஸ்டார். இவருக்கு எல்லா வகையான ஷாட்டும் இருக்கிறது. இவரே ஆஸ்திரேலியா இந்திய டி20 தொடரில் அதிக ரன்கள் எடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.






