9 போட்டிகள் அதிரடி மாற்றம்.. புது உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு.. 2 இந்திய மேட்சும் மாற்றம்.!

0
1021

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திருவிழாவாக பார்க்கப்படுவது 50 ஓவர் உலகக் கோப்பை . நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை நிகழ்வு தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது.

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியோடு கோலாகலமாக துவங்க இருக்கிறது. மொத்தம் 48 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெறுகின்றன .45 நாட்கள் நடைபெறும் உலக கோப்பை ஆனது இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் மாதம் ஐசிசி நிர்வாகி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைச் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டி போட்டிகள் நடைபெறும் மாநிலத்தின் காவல்துறை பிசிசிஐ நிர்வாகிகளை கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு தற்போது உலகக்கோப்பை போட்டிய அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . முத்தம் ஒன்பது போட்டிகள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில போட்டிகள் ஒரு நாளுக்கு முன்பாகவும் சில பகல் இரவு ஆட்டங்கள் பகல் ஆட்டங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் விளையாடும் போட்டிகளும் தேதிகள் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த புதிய அட்டவணையின் படி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி தற்போது அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு பதிலாக அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது . மேலும் அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது .

- Advertisement -

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருந்த நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் வைத்து அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மேலும் அக்டோபர் 10ஆம் தேதி பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருந்தது தற்போது பகல் போட்டியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதைப் போல நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியும் நினைவில் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நவம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கின்றன . நவம்பர் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நவம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது .

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக அம்மாநில காவல்துறை அறிவித்திருந்ததால் அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது . அதைப்போல நவம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் காளி பூஜை நடைபெற இருப்பதால் போதுமான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கொல்கத்தா காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

மாற்றப்பட்ட புதிய அட்டவணை

அக்டோபர் 10 – இங்கிலாந்து vs வங்கதேசம்
அக்டோபர் 10 – பாகிஸ்தான் (எ) இலங்கை
12 அக்டோபர் – ஆஸ்திரேலியா (எ) தென் ஆப்பிரிக்கா
அக்டோபர் 13 – நியூசிலாந்து (எ) வங்கதேசம்
அக்டோபர் 14 – இந்தியா (எ) பாகிஸ்தான்
15 அக்டோபர் – இங்கிலாந்து (எ) ஆப்கானிஸ்தான்
11 நவம்பர் – ஆஸ்திரேலியா (எ) வங்கதேசம்
11 நவம்பர் – பாகிஸ்தான் (எ) இங்கிலாந்து
12 நவம்பர் – இந்தியா (எ) நெதர்லாந்து